ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் மும்முரமாக தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், மொகாலியில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியும், லக்னோ அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியுடன் மோத உள்ளது. இன்றைய போட்டியின் வெற்றி புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். நடப்பு தொடரை பொறுத்தவரையில் பஞ்சாப் அணியை காட்டிலும் லக்னோ அணி வலுவான அணியாகவே உள்ளது. அதேசமயம் அந்த அணி இமாலய இலக்கை எட்டிப்பிடிப்பதும், சொற்ப இலக்கைகூட எட்ட முடியாமல் தோல்வியை தழுவவதும் அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேசமயம் பஞ்சாப் அணியை சாம்கரண் வழி நடத்த தொடங்கிய பிறகு அந்த அணி வலுப்பெற்றுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - பிந்தரா மைதானம், மொஹாலி
- நேரம் - இரவு 7.30 மணி!
போட்டி முன்னோட்டம்
கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ அணியில் பேட்டிங்கில் மேயர்ஸ், ஸ்டோய்னிஸ், பூரண், ஆயுஷ் பதோனி நம்பிக்கைக்குரிய வீரர்களாக உள்ளனர். கேப்டன் கே.எல்.ராகுல் களத்தில் நீண்ட நேரம் நின்றாலும் அவரது பழைய அதிரடி பேட்டிங் தற்போது வரை வெளிவராமலே இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும்.
கடந்த போட்டியில் லக்னோ அணி குஜராத் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததே இதற்கு உதாரணம்.பந்துவீச்சில் ஆவேஷ்கான், உனத்கட், மார்க்வுட், கிருஷ்ணப்ப கவுதம், கரண் சர்மா, குர்ணல் பாண்ட்யா உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே வெற்றியை பெற முடியும்.
பஞ்சாப் அணி இந்த தொடரை தொடக்கத்தில் தோல்வியுடன் தொடங்கினாலும், 4 வெற்றி பெற்று அவர்களும் சிறப்பாக ஆடி வருகின்றனர். குறிப்பாக, சாம் கரண் கேப்டன்சிக்கு பிறகு பஞ்சாப் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பஞ்சாப் அணிக்கு பேட்டிங்கில் பிரப்சிம்ரன்சிங், ஷார்ட் நல்ல தொடக்கமாக இருந்து வருகின்றனர்.
ஹர்பிரீத்சிங் பாட்டியாவும் சிறப்பாக ஆடி வருகிறார். ஜிதேஷ் சர்மா, ஷாரூக்கான் அதிரடியில் மிரட்டுகின்றனர். கேப்டன் சாம்கரண் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். இதனால், இறுதிக்கட்டத்தில் பஞ்சாப் ரன் ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. பந்துவீச்சை பொறுத்தவரையில் சாம் கரண், ரபாடா, நாதல் எல்லீஸ், ராகுல் சாஹர் இன்றைய போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்பலாம்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 02
- பஞ்சாப் கிங்ஸ் - 01
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 01
உத்தேச லெவன்
பஞ்சாப் கிங்ஸ் : மாட் ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைடே, லியாம் லிவிங்ஸ்டோன், ஹர்ப்ரீத் சிங் பாட்டியா, சாம் கரன் (கே), ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் : கேஎல் ராகுல், கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆயுஷ் படோனி, தீபக் ஹூடா, அவேஷ் கான், ரவி பிஷ்னோய், நவீன் உல் ஹக், அமித் மிஸ்ரா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
- பேட்ஸ்மேன்கள் - ஹர்பிரீத் சிங் பாட்டியா, கேஎல் ராகுல் (கே)
- ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோனிஸ், மேட் ஷார்ட், கைல் மேயர்ஸ், சாம் கர்ரன், குர்னால் பாண்டியா
- பந்துவீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஹர்பிரீத் ப்ரார்.