ஐபிஎல் 2023: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று மாலை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியுடன், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையடாவுள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இடம் - ஐஎஸ் பிந்த்ரா கிரிக்கெட் மைதானம், மொஹாலி
- நேரம் - மாலை 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி அதில் 3இல் வெற்றியும், 2இல் தோல்வியும் கண்டுள்ளது. முந்தைய ஆட்டத்தில் தோள்பட்டை காயத்தால் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ஷிகர் தவான் அணிக்கு திரும்புவார் என்று தெரிகிறது.
இதே போல காயத்தில் இருந்து குணமடைந்து தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள அதிரடி ஆல்-ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டனின் பெயர் அணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படலாம். பெங்களூருவுக்கு எதிராக மோதிய கடைசி 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தும் முனைப்புடன் தயாராகி வருகிறது.
பெங்களூரு அணியை எடுத்துக் கொண்டால், 5 ஆட்டங்களில் விளையாடி 2இல் வெற்றி, 3இல் தோல்வி என்று 4 புள்ளியுடன் 8ஆவது இடத்தில் இருக்கிறது. சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் 227 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி நெருங்கி வந்து 8 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
விராட் கோலி, டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரைத் தான் பெங்களூரு மலைபோல் நம்பி இருக்கிறது. இவர்கள் ஜொலித்தால் மட்டுமே வெற்றிப்பாதைக்கு திரும்ப முடியும். இன்னும் முழு உடல்தகுதியை எட்டாத வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இன்றைய ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 40
- பஞ்சாப் கிங்ஸ் - 17
- ஆர்சிபி - 13
உத்தேச லெவன்
பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கே), பில் சால்ட், சிக்கந்தர் ராசா, சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), சுயாஷ் பிரபுதேசாய், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, வெய்ன் பார்னெல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- கீப்பர் - தினேஷ் கார்த்திக்
- பேட்ஸ்மேன்கள் - ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), ஷிகர் தவான், பானுகா ராஜபக்சே, விராட் கோலி
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், சிக்கந்தர் ராசா (விசி)
- பந்துவீச்சாளர்கள் – சாம் கரன், வனிந்து ஹசரங்க, மொஹமட் சிராஜ், காகிசோ ரபாடா
*The Fantasy XI is based on the understanding, analysis, and instinct of the author. While selecting your team, consider the points mentioned and make your own decision.