ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Fri, May 05 2023 11:50 IST
IPL 2023 - Rajasthan Royals vs Gujarat Titans, Preview, Expected XI & Fantasy XI Tips (Image Source: CricketNmore)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. கிட்டதட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக கிரிக்கெட் திருவிழாவை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கு யார் யார் செல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கிட்டதட்ட 4 அணிகள் 10 புள்ளிகளுடன் 4 இடத்துக்கு போட்டியிட்டுள்ளது. இதேபோல் 2 அணிகள் 11 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் உள்ளது. 

இப்படியான நிலையில் இன்று நடக்கும் 48ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்
  • இடம் - சவாஸ் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 வெற்றி, 4 தோல்வி என்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4ஆவது இடம் வகிக்கிறது. பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்ந்த போதிலும் கடைசி 4 ஆட்டங்களில் 3இல் தோல்வியை தழுவியது. குறிப்பாக முந்தைய மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் சதம் அடித்தும் ஜெயிக்க முடியவில்லை.

இதே போல் முதல் 4 ஆட்டங்களில் 3-ல் அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர் கடைசி 5 ஆட்டங்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கேப்டன் சஞ்சு சாம்சனும் சமீபத்திய ஆட்டங்களில் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டர் தொடர்ந்து ரன்களை வாரி வழங்குவதும், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் விக்கெட் வீழ்த்த முடியாமல் தடுமாறுவதும் பின்னடைவை ஏற்படுத்துகிறது.

இது போன்ற விஷயங்களை சரி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள் என்று நம்பலாம். ஆனால் ஏற்கனவே குஜராத்தை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருப்பதாலும், உள்ளூரில் ஆடுவதாலும் அதிக நம்பிக்கையுடன் இறங்குவார்கள். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 வெற்றி, 3 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும் கடந்த ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக 130 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 5 ரன் வித்தியாசத்தில் குஜராத் தோற்றது ஆச்சரியம் அளித்தது.

கேப்டன் ஹர்திக் பாண்டியா 59 ரன்களுடன் களத்தில் இருந்தும் பலன் இல்லை. ஒரே ஒரு ஆறுதல் அந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 4 விக்கெட்டுகளை சாய்த்து அமர்க்களப்படுத்தினார். மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் தயாராகி வரும் குஜராத் அணியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் ராஜஸ்தானும் அவர்களுக்கு நிகரான அணி என்பதால் களத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 04
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 01
  • குஜராத் டைட்டன்ஸ் - 03

உத்தேச லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரான் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல், ஆடம் ஜம்பா

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, ஷுப்மான் கில், ஹர்திக் பாண்டியா (கே), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, முகமது ஷமி, ஜோசுவா லிட்டில்

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர்
  • பேட்ஸ்மேன்கள் - ஷுப்மன் கில், தேவ்தத் படிக்கல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் (துணை கேப்டன்), அபினவ் மனோகர்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்திக் பாண்டியா (கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - முகமது ஷமி, டிரென்ட் போல்ட், ஆடம் ஜம்பா, ரஷித் கான்.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை