ஐபிஎல் 2023:ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குஜராத், சென்னை அணிகள் ஏற்ழத்தால் பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்துள்ள நிலையில், மீதமுள்ள இரு இடங்களை பிடிக்க மற்ற அனைத்து அணிகளும் தீவிரமாக போராடி வருகின்றனர்.
அந்தவரிசையில் இன்று நடைபெறும் 60ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டியில் வெல்லும் அணிக்கே பிளே ஆஃப் சுற்றுக்காக வாய்ப்பு உள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
- இடம் - சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
- நேரம் - மாலை 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது ராஜஸ்தான் அணி.
தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்த ராஜஸ்தான் தனது கடைசி ஆட்டத்தில் கொல்கத்தாவை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியது. இந்த சீசனில் 12 ஆட்டங்களில் ஒரு சதம், 4 அரை சதங்கள் என 575 ரன்களை வேட்டையாடி உள்ள தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், பெங்களூரு பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவால் அளிக்கக்கூடும். மற்றொரு தொடக்க வீரரான ஜாஸ் பட்லரும் அச்சுறுத்தல் கொடுக்கக்கூடியவர்தான்.
இவர்களைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹெட்மையர், துருவ் ஜூரல் ஆகியோரும் மட்டைவீச்சில் பலம் சேர்க்கக்கூடியவர்கள். பந்து வீச்சில் 21 விக்கெட்களை வேட்டையாடி உள்ள யுவேந்திர சாஹல், பெங்களூரு பேட்டிங் வரிசைக்கு அச்சுறுத்தல் அளிக்கக்கூடும். டிரெண்ட் போல்ட், அஸ்வின், சந்தீப் சர்மா ஆகியோரும் பலம் சேர்க்கக்கூடும்.
அதேசமயம் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 11 ஆட்டத்தில் விளையாடி 10 புள்ளிகளுடன் பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் எஞ்சியுள்ள 3ஆட்டங்களிலும் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டும்.தனது கடைசி இரு ஆட்டங் களிலும்தோல்வியை சந்தித்த நிலையில்இன்றைய ஆட்டத்தை எதிர் கொள்கிறது பெங்களூரு அணி. இந்தசீசனில் 576 ரன்களை குவித்துள்ளடு பிளெஸ்ஸிஸ் மீண்டும் மட்டையை சுழற்றக் கூடும்.
அதேவேளையில் விராட் கோலியிடம் இருந்து நிலையான திறன் வெளிப்படவில்லை. எனினும் இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் அவர்,கூடுதல் பொறுப்புடன் செயல்படக்கூடும். இவர்களைத் தொடர்ந்து கிளென் மேக்ஸ்வெல் அதிரடி வீரராக உள்ளார். அதேவேளையில் நடுவரிசையில் மஹிபால் லாம்ரோர், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகியோரிடம் இருந்து பெரிய அளவிலான செயல் திறன் வெளிப்படாதது மிகப்பெரிய பலவீனமாக உள்ளது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 28
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 12
- ஆர்சிபி - 14
- முடிவில்லை - 02
உத்தேச லெவன்
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), ஜோ ரூட், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஆர் அஷ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்
ஆர்சிபி: ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), விராட் கோலி, அனுஜ் ராவத், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- கீப்பர் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்
- பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி(துணைக்கேப்டன்), ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- ஆல்-ரவுண்டர்கள் - ரவி அஷ்வின், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்க
- பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ், ஹர்ஷல் படேல்
*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.