ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்ட்ஸி லெவன்!

Updated: Sun, May 07 2023 15:33 IST
IPL 2023 - Rajasthan Royals vs Sunrisers Hyderabad, Preview, Expected XI & Fantasy XI Tips (Image Source: CricketNmore)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் இன்று நடைபெறும் 52ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஏற்கெனவே இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் அணி விளையாடவுள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 
  • இடம் - சாய்வாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. முதல் 5 ஆட்டங்களில் 4இல் வெற்றியை சுவைத்த அந்த அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4இல் தோல்வியை சந்தித்தது. முந்தைய 2 ஆட்டங்களில் மும்பை, குஜராத் அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்த அந்த அணி நெருக்கடியில் தவிக்கிறது.

தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் (442 ரன்கள்) நல்ல நிலையில் இருந்தாலும், முதல் 4 ஆட்டங்களில் 3 அரைசதம் விளாசிய ஜோஸ் பட்லர் அதன் பிறகு 6 ஆட்டங்களில் அரைசதம் அடிக்காததுடன் 2 முறை ரன்னின்றி டக்-அவுட்டும் ஆகியது அந்த அணியின் ரன் குவிப்பு வேகத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ளது.

எனவே ஜோஸ் பட்லர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப வேண்டியது அவசியமானதாகும். ஐதராபாத்துக்கு எதிரான முந்தைய மோதலில் ராஜஸ்தான் அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் எனலாம்.

அதேசமயம் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ளது. அந்த அணிக்கு இந்த ஆட்டம் வாழ்வா-சாவா போராட்டமாகும். ஏனெனில் எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும்.

அந்த அணியின் பந்து வீச்சு சிறப்பாக இருந்தாலும், பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருகிறார்கள். பேட்டிங்கில் ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி ஆகியோர் தங்களை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஆகிய இரண்டிலும் ஒரு சேர சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஐதராபாத் அணியால், ராஜஸ்தான் அணியின் சவாலை சமாளிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 17
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 09
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 08

உத்தேச லெவன்

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), தேவ்தத் பாடிக்கல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஷிம்ரான் ஹெட்மையர், துருவ் ஜூரல், டிரெண்ட் போல்ட், ஆடம் ஸாம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கே), ஹாரி புரூக், ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, தங்கராசு நடராஜன்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் 

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர்(துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், ஹென்ரிச் கிளாசென் 
  • பேட்ஸ்மேன்கள் - மயங்க் அகர்வால், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், ஐடன் மார்க்ரம் (கேப்டன்), மார்கோ ஜான்சன்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், மயங்க் மார்கண்டே
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை