ஐபிஎல் 2023: ஆர்சிபி vs சிஎஸ்கே - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Mon, Apr 17 2023 12:41 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 24ஆவது லீக் ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ்
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

இதுவரை 4 ஆட்டங்களில் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 2 வெற்றி, 2 தோல்விகளைச் சத்தித்துள்ளது. அணியில் இப்போது காயம் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர், சிசாண்டா மகாலா இரு வாரங்கள் விளையாட வாய்ப்பில்லை. கால்பாதத்தில் காயமடைந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. 

கேப்டன் தோனிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. கால்முட்டி வலியால் அவதிப்படும் டோனி 'ரிஸ்க்' எடுத்து அணியை வழிநடத்த தயாராக உள்ளார்.ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளது. பேட்டிங்கில் டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, கேப்டன் தோனி, பந்து வீச்சில் ஜடேஜா, துஷர் தேஷ்பாண்டே நல்ல நிலையில் உள்ளனர்.

சிஸ்கேவை போன்றே ஆர்சிபி அணியும் 2 வெற்றி, 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ளது. பெங்களூரு அணியில் கேப்டன் டூ பிளெசிஸ் (2 அரைசதம் உள்பட 197 ரன்), முன்னாள் கேப்டன் விராட் கோலி (3 அரைசதத்துடன் 214 ரன்), மேக்ஸ்வெல் (ஒரு அரைசதத்துடன் 100 ரன்) ஆகியோர் பேட்டிங்கின் தூண்களாக உள்ளனர். உள்ளூரில் ஆடுவதால் வரிந்து கட்டி நிற்பார்கள். இவர்களை கட்டுப்படுத்த தவறினால் எதிரணியின்பாடு திண்டாட்டம் தான். 

இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். குறைவான பவுண்டரி தூரம் கொண்ட இங்கு ரசிகர்கள் ரன் மழையை தாராளமாக எதிர்பார்க்கலாம். இங்கு இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களில் 57 சிக்சர்கள் அடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 31
  • சிஎஸ்கே - 20
  • ஆர்சிபி -10
  • டிரா - 01

உத்தேச லெவன்

சிஎஸ்கே: ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்கியா ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி. அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம் எஸ் தோனி(கே), துஷர் தேஷ்பாண்டே, ஆகாஷ்சிங், மஹீஷ் தீக்ஷனா, டுவைன் பிரிட்டோரியஸ்/ மதீஷா பதிரானா.

ஆர்சிபி: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஹர்ஷல் பட்டேல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், வநிந்து ஹசரங்கா, வெய்ன் பர்னெல்/ டேவிட் வில்லி, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - டெவான் கான்வே
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட்
  • ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, கிளென் மேக்ஸ்வெல், மொயீன் அலி
  • பந்துவீச்சாளர்கள் - விஜய் குமார் வைஷாக், முகமது சிராஜ், துஷார் தேஷ்பாண்டே

கேப்டன்/துணைக்கேப்டன் - விராட் கோலி, ஃபாஃப் டூ பிளெசிஸ், டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை