ஐபிஎல் 2023: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Apr 26 2023 12:57 IST
Image Source: CricketNmore

16அவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 36ஆவது லீக் போட்டியில் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது. கேப்டன் டூ பிளெசிஸ், கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து அசத்தலான ஃபார்மில் உள்ளனர். ஆனால், அவர்களை தவிர வேறு யாரும் பேட்டிங்கில் சோபிக்காதது பெங்களூருவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதேபோன்று பந்துவீச்சிலும் முகமது சிராஜ் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வர, ஹர்ஷல் படேல் உள்ளிட்டோர் தொடர்ந்து அதிக ரன்களை வாரி வழங்கி வருகின்றனர்.  கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, இன்றைய போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் நுழைய முனைப்பு காட்டி வருகிறது.

கொல்கத்தா அணி இதுவரை நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி, இரண்டில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. கேப்டன் ராணா, ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்ட எந்தவொரு பேட்ஸ்மேனும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதும், நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவதும் அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது.

நடப்பு தொடரில் இரு அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் அதற்கு பழிதீர்க்கும் முனைப்பில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்கும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

மைதானம் எப்படி?

பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும். முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற வேண்டுமானால் எதிரணிக்கு மிகப்பெரிய  இலக்கை நிர்ணயிக்க வேண்டியது கட்டாயமாகும்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 31
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 14
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 17

உத்தேச லெவன்

ஆர்சிபி - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், ஷாபாஸ் அகமது, கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், சுயாஷ் பிரபுதேசாய், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், ஹர்ஷல் பெட்டல், முகமது சிராஜ்.

கேகேஆர் - நாராயண் ஜெகதீசன், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கே), ஜேசன் ராய், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், டேவிட் வைஸ், உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி, குல்வந்த் கஜ்ரோலியா.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - தினேஷ் கார்த்திக்
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங்
  • ஆல்-ரவுண்டர்கள் - சுனில் நரைன், கிளென் மேக்ஸ்வெல் (கே), ஆண்ட்ரே ரஸல்
  • பந்துவீச்சாளர்கள் - ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்

கேப்டன்/துணைக்கேப்டன் - விராட் கோலி, ஃபாஃப் டூ பிளெசிஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை