இங்கு பிங்க் ஜெர்சியை எதிர்பார்த்தேன், ஆனால் மஞ்சள் தான் அதிகமாக இருக்கிறது - சஞ்சு சாம்சன்!

Updated: Thu, Apr 27 2023 20:07 IST
IPL 2023: RR skipper SanjuSamson makes an interesting comment on Yellow Jersey! (Image Source: Google)

ஐபிஎல் 16ஆவது சீசனில் இன்று நடைபெறும் 37ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராஜஸ்தான் சவாய் மான்சிங் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் இதற்கு முன்னால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதிக்கொண்ட போட்டியில், பரபரப்பான கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது.

தற்பொழுது ஏழு ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து வெற்றிகள் பெற்று 10 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நான்கு வெற்றிகள் உடன் 8 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. எனவே இன்று நடைபெறும் போட்டி ப்ளே ஆப் சுற்று வாய்ப்பைப் பொறுத்தவரை இரண்டு அணிகளுக்குமே மிக முக்கியமானதுதான். 

சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றை ஏறக்குறைய முடிவு செய்து விடும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடந்த இரு ஆட்டங்களில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீண்டு வர இந்த ஆட்டத்தின் வெற்றி மிக முக்கியம். இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

அப்போது பேசிய அவர், “இது ஒரு நல்ல விக்கெட் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் இன்று முதலில் பேட்டிங் செய்ய நினைக்கிறோம். எங்கள் பலத்தோடு நாங்கள் ஒட்டிக் கொள்ள விரும்புகிறோம். எங்கள் பலம் இரண்டாவது பந்து வீசுவது. ராஜஸ்தான் ராயல் அணி இன்று 200ஆவது போட்டியில் விளையாடுவது பெரிய விஷயம். இன்று மைதானத்தில் நாங்கள் நிறைய பிங்க் ஜெர்சியை காண்பதற்கு எதிர்பார்த்தோம். ஆனால் மஞ்சள்தான் அதிகமாக இருக்கிறது. இதற்கான காரணம் எங்களுக்கு தெரியும்” என்று தெரிவித்தார். 

அதைத்தொடர்ந்து பேசிய மகேந்திர சிங் தோனி, “நாங்கள் முதலில் பந்துவீசித்தான் இருப்போம். இந்த ஆடுகளத்தில் நல்ல வேகம் உள்ளது ஆனால் பவுன்ஸ் குறைவாக உள்ளது. எனது பந்துவீச்சாளர்கள் இதற்கு தகுந்த மாதிரி விரைவாக மாறிக் கொள்ள வேண்டும். ஆட்டத்தில் நாளின் முடிவில் நமக்கு அதில் இருந்து நல்ல கேரக்டர்கள் வெளிவர வேண்டும். நாங்கள் கேரக்டர்களை உருவாக்கவே முயற்சி செய்கிறோம். செயல்பாட்டில் கவனம் செலுத்த அவர்களை நம்ப வைக்க முயற்சி செய்கிறோம். முடிவைப் பற்றி கவலையில்லை” என்று தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை