ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
16ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.
இதுவரை 35 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன. ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல், 27) நடக்கவுள்ள 3ஆவது லீக் போட்டியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மூன்றாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
- இடம் - சாய்வால் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
தோனி தலைமையிலான சென்னை அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருக்கிறது. முந்தைய 3 லீக் ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றியை ருசித்த சென்னை அணி அந்த வீறுநடையை தொடரும் முனைப்புடன் இருக்கிறது.
சென்னை அணியின் பேட்டிங்கில் டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே, ஷிவம் துபே ஆகியோர் சூப்பர் ஃபார்மில் இருக்கிறார்கள். டிவான் கான்வே தொடர்ச்சியாக 4 அரைசதம் அடித்து இருப்பதும், முந்தைய ஆட்டத்தில் ரஹானே 24 பந்துகளில் அரைசத்தை எட்டியதுடன் 71 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. பந்து வீச்சில் துஷர் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, மொயீன் அலி, பதிரானா, தீக்ஷனா ஆகியோர் கலக்கி வருகிறார்கள்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 7 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியும், 3 தோல்வியும் கண்டுள்ளது. அந்த அணி தனது முந்தைய 2 லீக் ஆட்டங்களில் லக்னோ, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்து வீழ்ந்தது. ரன் இலக்கை விரட்டுகையில் சந்தித்த இந்த தோல்விகளுக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பல் முக்கிய காரணமாகும்.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். ஆனால் சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், துருவ் ஜூரெல் ஆகிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவது அந்த அணிக்கு பாதகமான அம்சமாக உள்ளது. எனவே மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்க வேண்டியது அவசியமானதாகும். பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல் , டிரென்ட் பவுல்ட், ஆர்.அஸ்வின், சந்தீப் ஷர்மா ஆகியோர் அசத்தி வருகிறார்கள்.
முந்தைய தோல்வியை மறந்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வியூகங்களை வகுக்கும் ராஜஸ்தான் அணி சேப்பாக்கத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பதால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர சென்னை அணி எல்லா வகையிலும் வரிந்து கட்டும். சமபலம் வாய்ந்த இந்த இரண்டு அணிகளும் மல்லுக்கட்டும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
நேருக்கு நேர்
- மோதும் அணிகள் - 27
- ராஜஸ்தான் ராயல்ஸ் - 12
- சென்னை சூப்பர் கிங்ஸ் - 15
உத்தேச லெவன்
ராஜஸ்தான் ராயல்ஸ் - யஷஸ்வி ஜெய்ஷ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரான் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்கியா ரஹானே, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி (கே), மொயின் அலி, மதிஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் திக்ஷனா, ஆகாஷ் சிங்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்கள் - டெவான் கான்வே, ஜோஸ் பட்லர்
- பேட்ஸ்மேன்கள் - அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட், தேவ்தத் படிக்கல், யஷஸ்வி ஜெய்ஷ்வால்
- ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின்
- பந்துவீச்சாளர்கள் - டிரென்ட் போல்ட், துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்
கேப்டன் /துணைக்கேப்டன் - டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்கியா ரஹானே, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்