ஐபிஎல் 2023:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸ் லெவன் டிப்ஸ்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனுக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் மல்லுகட்டி வரும் நிலையில், புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களில் இருந்து முன்னேறுவதற்காக இன்று சன்ரைசர்ஸ் ஹைதரபாத் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த சீசன் தொடங்கியது முதல் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணிகளாக சன்ரைசஸும், டெல்லி அணியும் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் உள்ள டெல்லி அணியும், புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணியும் இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமின்றி இனி வரும் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆப் வாய்ப்பை பற்றி நினைத்து பார்க்க முடியும்.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ்
- இடம் - ராஜீவ் காந்தி மைதானம், ஹைதராபாத்
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
டெல்லி அணியை பொறுத்தவரை கேப்டன் வார்னர் மிகப்பெரிய பலம் ஆகும். டெல்லி அணியில் வார்னருடன் மார்ஷ், மணீஷ் பாண்டே, ரோவ்மென் பாவெல், லலித்யாதவ், ரோசொவ் ஆகியோர் உள்ளனர். ஆனால், இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சிறப்பாக ஆடினால் மட்டுமே டெல்லி வெற்றி பெற முடியும்.
ஆல்ரவுண்டர் அக்ஷர் படேல் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார். இன்றைய போட்டியிலும் அவர் அசத்துவார் என்று எதிர்பார்க்கலாம். டெல்லி அணியின் பந்துவீச்சில் கலீல் அகமது, பிரியம்கார்க், யஷ்துல், முகேஷ் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். சுழலில் அக்ஷர் படேல், குல்தீப்யாதவ் கலக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.
முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் அணி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது அவர்களது உடல்மொழி ஹைதரபாத் ரசிகர்களுக்கு மட்டுமின்றி மற்ற அணி ரசிகர்களுக்குமே சோகத்தை ஏற்படுத்தியது. போராட்ட குணமின்றி தோல்வி மனப்பான்மையை அவர்களது உடல்மொழியே காட்டியது. இந்த போட்டியில் அவர்கள் அதை மாற்ற வேண்டியது அவசியம் ஆகும்.
கேப்டன் மார்க்ரம், கிளாசென், ஹாரி ப்ரூக், மயங்க் அகர்வால் ஆகியோர் கட்டாயமாக அதிரடியாக விளையாட வேண்டியது அவசியம். ராகுல் திரிபாதி, அபிஷேக் சர்மாவும் கண்டிப்பாக பேட்டிங்கில் அசத்த வேண்டும். மயங்க் அகர்வால் தொடர்ந்து சொதப்பி வரும் சூழலில், இன்றைய போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கபடுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பந்துவீச்சில் உம்ரான்மாலிக், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், மார்கண்டே, நடராஜன் ஆகியோர் சிறப்பாக பந்துவீச வேண்டியதும் அவசியம் ஆகும்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள்- 21
- டெல்லி கேப்பிட்டல்ஸ் - 10
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 11
உத்தேச லெவன்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஹாரி புரூக், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கே), ஹென்ரிச் கிளாசென், மயங்க் அகர்வால், மார்கோ ஜான்சன், வாஷிங்டன் சுந்தர், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் - டேவிட் வார்னர் (கே), பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், பில் சால்ட், மணீஷ் பாண்டே, அக்ஷர் படேல், அமன் ஹக்கிம் கான், லலித் யாதவ், குல்தீப் யாதவ், அன்ரிச் நோர்ட்ஜே, இஷாந்த் சர்மா.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஹென்ரிச் கிளாசென்
- பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், அபிஷேக் சர்மா, ஹாரி புரூக்
- ஆல்-ரவுண்டர்கள் - மிட்செல் மார்ஷ், அக்சர் படேல், ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன்
- பந்துவீச்சாளர்கள் - இஷாந்த் சர்மா, அன்ரிச் நோர்ட்ஜே, மயங்க் மார்கண்டே
கேப்டன்/துணைக்கேப்டன் - டேவிட் வார்னர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், ஹாரி ப்ரூக்