ஐபிஎல் தொடரில் களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித்; வீரராக அல்ல?

Updated: Tue, Mar 28 2023 11:44 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். சில அணிகளில் முக்கிய வீரர்கள் காயமடைந்துள்ளதால், அவர்களுக்கான மாற்று வீரர்களையும், மாற்றுத் திட்டங்களையும் அணி நிர்வாகங்கள் ஆலோசித்து வருகின்றனர்.

அதேபோல் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நட்சத்திர வீரர்கள் பலரும் ஏலத்தில் வாங்கப்படவில்லை. குறிப்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை எந்த அணியும் ஏலத்தில் வாங்க முன் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக அவர் விளையாடி இருந்ததால், மீண்டும் வாங்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார்.

ஆனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகமும் ஸ்டீவ் ஸ்மித்தை வாங்கவில்லை. அதுமட்டுமல்லாமல் சமகால கிரிக்கெட்டில் கொடிகட்டி பறந்த நட்சத்திர வீரர்களான வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோருமே அடிப்படை தொகைக்கு குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளால் வாங்கப்பட்டனர். இதனால் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் "ஃபேப் 4"ல் உள்ள கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்காதது சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இந்த நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஸ்டீவ் ஸ்மித் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. களத்தில் விளையாடும் வீரராக அல்லாமல் வீரர்கள் விளையாட்டை வர்ணணை செய்யும் கமெண்ட்டேட்டராக பங்கேற்க உள்ளார். ஜாம்பவான் வீரராக அறியப்படும் ஸ்டீவ் ஸ்மித், உச்சத்தில் இருக்கும் போது ஐபிஎல் போன்ற முக்கிய தொடரில் வர்ணணை செய்ய உள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்திய அணியின் தினேஷ் கார்த்திக், ஐபிஎல் தொடரில் உச்சத்தில் இருந்த போதே, வர்ணனையாளராக பணியாற்றியது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது ஸ்டீவ் ஸ்மித்தும் அதே பாணியில் வர்ணனையில் ஈடுபட உள்ளார். இதனிடையே விராட் கோலியின் பேட்டிங் நுட்பத்தை ஸ்டீவ் ஸ்மித் வர்ணனை செய்வது எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை