ஐபிஎல் 2023: கிளாசென், சமத் அதிரடி; லக்னோவுக்கு 183 டார்கெட்!

Updated: Sat, May 13 2023 17:21 IST
Image Source: Google

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 58ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா - அன்மோல்ப்ரீத் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் அபிஷேக் சர்மா 7 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ராகுல் திரிபாதியும் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து அன்மோல்ப்ரீத்துடன் இணைந்த கேப்டன் ஐடன்  மார்க்ரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அன்மோல்ப்ரீத் சிங் 36 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் கேப்டன் ஐடன் மார்க்ரம் 28 ரன்களிலும், அடுத்து வந்த கிளென் பிலீப்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் குர்னால் பாண்டியாவின் அடுத்தடுத்த பந்துகளில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் - அப்துல் சமாத் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அரைசதம் நோக்கி நகர்ந்துகொண்டிருந்த ஹென்ரிச் கிளாசென் 47 ரன்களில் ஆட்டமிழது அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த அப்துல் சமாத் 4 சிக்சர், ஒரு பவுண்டரி என 36 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களைச் சேர்த்துள்ளது. லக்னோ அணி தரப்பில் கேப்டன் குர்னால் பாண்டியா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை