ஐபிஎல் 2023:சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு -  போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, May 18 2023 11:27 IST
IPL 2023 - Sunrisers Hyderabad vs Royal Challengers Bangalore , Preview, Expected XI & Fantasy XI Ti (Image Source: CricketNmore)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

அந்தவகையில் இன்று நடைபெறும் 65ஆவது லீக் ஆட்டத்தில் ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றிபெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை உறுதிசெய்யும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - ராஜீவ் காந்தி மைதானம், ஹதராபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஐடன் மார்க்ரம் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கிளாசென், பெளலிங்கில் புவனேஷ்வர் குமார் ஆகியோர் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை தவிர மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஆனால் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் சன் ரைசர்ஸ் அணி இன்றைய போட்டியில் விளையாட இருப்பதால், பஞ்சாப் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி போல் திடீர் விஸ்வரூபத்தை எடுக்கலாம்.

அதேசமயம் ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று இருக்கிறது. கடந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை 59 ரன்னில் சுருட்டி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதால் ரன்-ரேட்டில் (+0.166) வலுவான நிலையை எட்டிய பெங்களூரு அணி எஞ்சிய 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழையலாம். 

ஒன்றில் தோற்றால் அடுத்த அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் தான் தகுதி பெற முடியும். எனவே அந்த அணிக்கு இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. இருப்பினும் வலுவான பெங்களூரு அணியின் சவாலை சமாளிக்க வேண்டும் என்றால் ஹைதராபாத் அணி எல்லா துறையிலும் சிறந்து விளங்கினால் மட்டுமே சாத்தியமாகும் என்பதில் சந்தேகமில்லை. 

நேருக்கு நேர் 

  • மோதிய போட்டிகள் - 22
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 12
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 09

உத்தேச லெவன்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ராம் (கே), ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், சன்வீர் சிங், மார்கோ ஜான்சன், மயங்க் மார்கண்டே, புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, தங்கராசு நடராஜன்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கே), கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், மைக்கேல் பிரேஸ்வெல், அனுஜ் ராவத், வெய்ன் பார்னெல், கர்ண் ஷர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - ஹென்ரிச் கிளாசென் (துணை கேப்டன்)
  • பேட்ஸ்மேன்கள் - விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அபிஷேக் சர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஐடன் மார்க்ரம், மார்கோ ஜான்சன்
  • பந்துவீச்சாளர்கள் - வெய்ன் பார்னெல், புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ்

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை