இதுபோன்ற தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது - ஐடன் மார்க்ரம்!

Updated: Tue, Apr 25 2023 14:20 IST
IPL 2023: “We are letting ourselves down with the bat,” says Markram (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 34ஆவது லீக் ஆட்டமானது நேற்று விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் அற்புதமாக நடைபெற்று முடிந்தது. லோ ஸ்கோரிங் திரில்லராக நடைபெற்ற இந்த போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய டெல்லி அணியானது வெறும் ஏழு ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. 

அதன்படி நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியானது பெரிய ரன் குவிப்பிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 144 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் 145 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன் ரைசர்ஸ் அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டெல்லி அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்காத சன் ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. இதன் காரணமாக ஏழு ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் எளிதாக பெற்று இருக்க வேண்டிய வெற்றியை சன் ரைசர்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் தவறவிட்டனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய ஐடன் மார்க்ரம், “நாங்கள் இந்த போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை. எந்த ஒரு பேட்ஸ்மேனுமே இந்த போட்டியில் சரியான இன்டென்டை காண்பிக்கவில்லை. இதுபோன்ற தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது. இனிவரும் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சுதந்திரமாகவும், அதிரடியாகவும் விளையாட வேண்டியது அவசியம்.

ஒருவேளை அவ்வாறு நாம் விளையாடவில்லை என்றால் நிச்சயம் இன்று இரவு நடைபெற்ற மாதிரி தான் அனைத்து போட்டிகளுமே முடிவுகள் தவறாக நடக்கும். என்னை பொறுத்தவரை இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் வெற்றிக்கான இன்டன்டை காண்பிக்கவில்லை. இனிவரும் போட்டிகளில் அதனை திருத்திக் கொண்டு தங்களது பங்களிப்பை வழங்க முன்வர வேண்டும். நிச்சயம் இனிவரும் போட்டிகளில் நானும் என்னுடைய ஆட்டத்தையும் மாற்றிக் கொள்வேன்.

ஒரு அணியாக டெல்லி அணி போராடியதும் அருமையாக இருந்தது. இந்த போட்டியில் நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் பேட்டிங்கில் சோபிக்க தவறி விட்டோம். நிச்சயம் இந்த தோல்வியிலிருந்து கிடைத்த பாடங்களை எடுத்துக்கொண்டு அடுத்த போட்டியில் வெற்றிகரமாக களத்திற்கு திரும்புவோம்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை