ஐபிஎல் 2024: அக்ஸர், ரிஷப் அரைதம்; குஜராத் அணிக்கு 225 ரன்கள் இலக்கு!

Updated: Wed, Apr 24 2024 21:14 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் 17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துவருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்ற 40ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லியிலுள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு பிரித்வி ஷா - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை வழக்கம் போல் தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களையும் விளாசினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 23 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களை எடுத்திருந்த பிரித்வி ஷாவும் அதே ஓவரில் சந்தீப் வாரியரிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ஷாய் ஹோப் 5 ரன்கள் மட்டுமே எடுத்து சந்தீப் வாரியர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

பின்னர் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் - கேப்டன் ரிஷப் பந்த் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். அதன்பின் இருவரும் அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்ஸர்களும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் தொடர்ந்து அபாரமாக விளையாடிய வந்த அக்ஸர் படேல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியார். இதில் அதிரடியாக விளையாடிய அகஸர் படேல் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 66 ரன்களைச் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். 

ஆனாலும் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பந்த் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேசமயம் அவருடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரிஷப் பந்த் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 88 ரன்களையும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் சந்தீப் வாரியர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை