17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது முதல் பாதியைக் கடந்து தற்போது இரண்டாம் பாதியை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிரங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் சாம் கரண் மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். 

Advertisement

இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த பிரப்ஷிம்ரன் சிங் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பௌ தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் 9 ரன்களோடு நடையைக் கட்ட, மறுபக்கம் 20 ரன்களைச் சேர்த்த நிலையில் கேப்டன் சான் கரணும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா இப்போட்டியிலாவது அணியை கரைசேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

Advertisement

பின்னர் அணியின் நம்பிக்கை நாயகர்களான லியாம் லிவிங்ஸ்டோன், அஷுதோஷ் சர்மா மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோரும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 99 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் பாடியா மற்றும் ஹர்ப்ரீத் பிரார் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். பின் அதிரடியாக் அவிளையாடிய ஹர்ப்ரீத் பிரார் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்ஷல் படேலும் முதல் பந்திலேயே நடையைக் கட்ட, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ப்ரீத் பாட்டியா 14 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், மோஹித் சர்மா, நூர் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 143 அன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவுள்ளது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News