மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் அடித்த கிளாசென்; வைரல் காணொளி!

Updated: Mon, Apr 15 2024 22:19 IST
Image Source: Google

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று பலப்பரீட்சை நடத்தியது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்களை பிரித்து மேய்ந்ததுடன், 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்களைக் குவித்தது. 

அதன்படி இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் சதமடித்து அசத்தியதுடன் 9 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 67 ரன்களையும் குவிக்க, இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஐடன் மார்க்ரம் 32 ரன்களையும், அப்துல் சமத் 37 ரன்களையும் குவித்தனர். 

அதேசமயத்தில் ஆர்சிபி அணி தரப்பில் பந்துவீசிய அனைவரும் சுமார் 10 என்ற எகானமிக்கு மேல் ரன்களை வாரி வழங்கினர். இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆர்சி அணியானது தற்போது விளையாடிவருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் ஹென்ரிச் கிளாசென் விளாசிய இமாலய சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்று விழுந்த காணொளி வைரலாகியுள்ளது. 

 

அதன்படி இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை ஆர்சிபி அணியின் லோக்கி ஃபர்குசன் வீச, அந்த ஓவரின் இரண்டாவது பந்தை ஹென்ரிச் கிளாசென் சிக்ஸர் விளாசினார். அந்த சிக்ஸரானது மைதானத்திற்கு வெளியே சென்றதுடன் 106 மீட்டர் தூரத்திற்கு சென்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் சீசனில் அடிக்கப்பட்ட மிக நீளமான சிக்ஸராகவும் பதிவானது. இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை