ஐபிஎல் 2024: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - உத்தேச லெவன்!

Updated: Sat, Mar 23 2024 15:49 IST
Image Source: Google

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது நேற்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் இன்று நடைபெறும் 3ஆவது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலப்பரீட்சை நடத்துகிறது.

இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ளதால், நடப்பு சீசனிலும் மீண்டும் கோப்பையை வெல்லும் அணிகளாக கணிப்பட்டுள்ளன. மேலும் இரு அணிகளிலும் நட்சத்திர பட்டாளங்கள் உள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. அந்த வகையில் இரு அணிகளின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஸ்ரேயஸ் ஐயர் தலைமையில் களமிறங்கிய கேகெஆர் அணியானது வலிமையான அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அணியில் அதிரடி பேட்டர்களும், நட்சத்திர பந்துவீச்சாளர்களும் இடம்பிடித்துள்ளனர். இதில் கேகேஆர் அணியின் பிளேயிங் லெவனைப் பொறுத்தவரையில் ரஹ்மனுல்லா குர்பாஸ், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரு நிச்சயம் இடம்பிடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒருவேளை மாற்றும் வரும் எனில் குர்பாஸுக்கு பதிலாக பில் சால்ட் அணியில் இடம்பிடிப்பதற்கு அதிகபடியான வாய்ப்பு உள்ளது. 

கேகேஆர் உத்தேச லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ்/பில் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கே), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், சேத்தன் சகாரியா, வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

பாட் கம்மின்ஸ் அணி தரப்பில் களமிறங்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நடப்பு சீசனின் மிக வலிமையான அணிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் அந்த அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் வெளிநாட்டு வீரர்கள் இருப்பதால் எந்தெந்த வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில் டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், வநிந்து ஹசரங்கா, மார்கோ ஜான்சென் போன்றோர் உள்ளதால் இதில் எந்த மூன்று வீரர்கள் இடம்பிடிப்பார்கள் என்பது ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எஸ்ஆர்எச் உத்தேச லெவன்: மயங்க் அகர்வால், டிராவிஸ் ஹெட், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், உபேந்திர யாதவ், பாட் கம்மின்ஸ் (கே), வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், நடராஜன், புவனேஷ்வர் குமார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை