ஐபிஎல் 2024:புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய மும்பை, ஹைதராபாத்!

Updated: Thu, Mar 07 2024 22:16 IST
ஐபிஎல் 2024:புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்திய மும்பை, ஹைதராபாத்! (Image Source: Google)

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான சீசனின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதேசமயம் அனைத்து அணிகளும் தொடரில் கோப்பையை வெல்லு முனைப்புடன் இத்தொடரை எதிர்நோக்கி காத்துள்ளனர். மேலும் இத்தொடர் தொடங்க சிள் நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

முன்னதாக நடைபெற்ற வீரர்கள் ஏலத்திலே ஐபிஎல் அணிகள் மிகப்பெரும் முடிவுகளை எடுத்து அடுத்தடுத்து ரசிகர்களுக்கு ஆச்சரியங்களை வழங்கினர். அதன் படி மும்பை இந்தியன்ஸ் அணி டிரேடிங் முறையில் ஹர்திக் பாண்டியாவை வாங்கியதுடன், அவரையே கேப்டனாகவும் நியமித்தது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி ஹர்திக்கை புதிய கேப்டனாக நியமித்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் விமர்சனங்களை எழுப்பியது.

 

அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு ஏலம் எடுத்து அனைவரையும் வியக்க வைத்தது. அதுமட்டுமின்றி அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஐடன் மார்க்ரமையும் அப்பதவியிலிருந்து நீக்கியதுடன், பாட் கம்மின்ஸை அணியின் புதிய கேப்டனாக நியமித்து அறிவிப்பை வெளியிட்டது. இதனால் அவரின் தலைமையின் கீழ் சன்ரைசர்ஸ் அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிபார்ப்பு எழுந்துள்ளது.

 

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சிகளை மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று வெளியிட்டுள்ளன. அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களது புதிய ஜெர்சிக்கான அறிவிப்பை காணொளியாக தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் வெளியிட்டுள்ளன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை