அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாட விரும்புகிறேன் - டிராவிஸ் ஹெட்!

Updated: Tue, Apr 16 2024 14:48 IST
அபிஷேக் சர்மாவுடன் இணைந்து விளையாட விரும்புகிறேன் - டிராவிஸ் ஹெட்! (Image Source: Google)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று நடைபெற்று முடிந்தது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது என்றுதான் கூற வேண்டும். எனேனில் இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 287 ரன்களைக் குவித்தது.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் சதமடித்ததுடன் 102 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 67 ரன்களையும் குவித்தனர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 62 ரன்களையும், விராட் கோலி 42 ரன்களையும், இறுதிவரை போராடிய தினேஷ் கார்த்திக் 5 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 83 ரன்களைச் சேர்த்த நிலையிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 262 ரன்களை மட்டுமே எடுத்தது. 

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய டிராவிஸ் ஹெட், “மும்பை அணிக்கு பிறகு நான் சிறப்பாக விளையாடிய போட்டியாக இதனை பார்க்கிறேன். இந்த ஆடுகள் விளையாடுவதற்கு எளிதாக இருந்தது.

மேலும் இந்த மைதானத்தின் தன்மை குறித்து மைதான பராமரிப்பாளர்கள் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களிடன் கேட்டறிந்தோம். அவர்களின் ஆலோசனைப் படியே இப்போட்டியை நாங்கள் அனுகினோம். அபிஷேக் சர்மாவும் நானும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு களத்தில் விளையாடினோம். அவர் இளமையாகவும் அச்சமற்றவராகவும் இருக்கிறார். நான் அவருடன் பேட்டிங் செய்வதை விரும்புகிறேன். இன்று சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை