பட்லரை மிரள வைத்த பியூஷ் சாவ்லா - வைரலாகும் காணொளி!

Updated: Mon, Apr 22 2024 23:27 IST
பட்லரை மிரள வைத்த பியூஷ் சாவ்லா - வைரலாகும் காணொளி! (Image Source: Google)

ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டியானது ஜெய்ப்பூரிலுள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியி; டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இஷான் கிஷன் - ரோஹித் சர்மா இணை தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் 6 ரன்கள் எடுத்திருந்த ரோஹித் சர்மா விக்கெட்டை இழக்க, அடுத்த ஓவரில் இஷான் கிஷன்  ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தனர்.

அதன்பின் இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் சூர்யகுமார் யாதவ் 10 ரன்களில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த நபியும் 23 ரன்களில் பெவிலியன் திரும்ப 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்த மும்பை 72 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் கைகோர்த்த திலக் வர்மா - நேஹால் வதேரா இணை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் நேஹால் வதேரா 4 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டி மிரட்டினாலும், 49 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம் திலக் வர்மா நிலைத்து நின்று விளையாடி அரைசதம் கடந்த நிலையில் 65 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். மற்றபடி கேப்டன் ஹர்திக் பாண்டியா 10 ரன்களுக்கும் டிம் டேவிட் 3 ரன்களுக்கும் என விக்கெட்டுகளை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் சந்தீப் சர்மா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை அதிரடியான தொடக்கம் கொடுத்து அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். இருவரும் இணைந்து பவுண்டரிகளை விளாசித் தள்ள முதல் ஆறு ஓவர்களிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது விக்கெட் இழப்பின்றி 61 ரன்களை குவித்தது. இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறுது நேரம் தடைபட்டது. 

 

அதன்பின் மீண்டும் தொடங்கிய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வந்த ஜோஸ் பட்லர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரிகளுடன் 35 ரன்களைச் சேர்த்த நிலையில் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இன்னிங்ஸின் 8ஆவது ஓவரை பியூஷ் சாவ்லா வீச அந்த ஓவ்ரின் கடைசி பந்தை அடிக்க முயன்ற பட்லர் அதனை சரியாக கணிக்க தவறினார். 

மேலும் பந்து வழக்கத்தை விட குறைவாக பவுன்ஸாகி சென்றதால் பட்லர் அதனை தவறவிட்டாலும், பந்து நேரடியாக ஸ்டம்புகளை தாக்கியது. இதனல் ஒருகனம் என்ன நடந்தது என புரியமால் பார்த்த பட்லர், குழப்பத்துடனே பெவிலியனை நோக்கி சென்றார். இந்நிலையில் பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை