ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியது ஆர்சிபி!

Updated: Tue, Mar 26 2024 12:45 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய ஆர்சிபி அணியில் டு பிளெசிஸ், மேக்ஸ்வெல், க்ரீன் போன்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 

ஆனாலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நட்சத்திர வீரர் விராட் கோலி அரைசதம் அடித்ததுடன், 77 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.  இதனால் கடைசி கடைசி ஓவரில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலைக்கு ஆட்டம் சென்றதால், இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற பரபரப்பும் தொற்றிக்கொண்டது. பஞ்சாப் அணி தரப்பில் கடைசி ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச, அந்த ஓவரின் முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக் சிக்சர் அடித்து ஆர்சிபியின் வெற்றியும் உறுதியானது.

இதில் இறுதிவரை களத்தில் இருந்த தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 28 ரன்களைச் சேர்த்ததுடன் அணிக்கும் வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்த விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இப்போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசன் புள்ளிப்பட்டியளில் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

இப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டாம் இடத்தையும், குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. அடுத்தடுத்த இடங்கலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி அணிகள் தலா 2 புள்ளிகளைப்பெற்றுள்ளன. அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் தோல்வியைச் சந்தித்து புள்ளிகள் ஏதுமின்றி பட்டியலில் தொடர்கின்றன.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை