ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்!

Updated: Mon, Apr 22 2024 15:33 IST
ஐபிஎல் புள்ளிப்பட்டியல் : இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது கேகேஆர்! (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் முதல் பாதி கட்டத்தை கடந்து இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்றைய தினம் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றது. இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் விளையாடிய கேகேஆர் அணி 223 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதன்பின் இப்போட்டியின் கடைசி பந்துவரை போராடிய ஆர்சிபி அணி இறுதியில் ஒரு ரன் வித்தியாசத்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.

அதேபோல் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் பஞ்சப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அனி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்நிலையில் இந்த போட்டிகளின் முடிவில் ஐபிஎல் தொடர் புள்ளிப்பட்டியலில் சில மாற்றங்கள் நிகழந்துள்ளன.

அதன்படி ஆர்சிபி அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் கேகெஆர் அணி இந்த சீசனில் தங்களது 5ஆவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் இந்த சீசனில் 7 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, இரண்டு தோல்விகள் என 10 புள்ளிகளைப் பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி புள்ளிப்பட்டியலின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் இப்போட்டியில் தோல்வியடைந்த ஆர்சிபி அணி 8 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்வி என 2 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலின் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது 4ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது. இதன்மூலம் குஜராத் அணி இதுவரை விளையாடியுள்ள 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 6ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் 6 தோல்வி, 2 வெற்றி என 4 புள்ளிகளைப் பெற்று பட்டியலின் 9ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடித்து வருகிறது.

 

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை