அப்ஸ்ட்ரக்டிங் தி ஃபீல்ட் முறையில் விக்கெட்டை இழந்த ரவீந்திர ஜடேஜா - வைரலாகும் காணொளி!
சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 61ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலபப்ரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க , தொடர்ந்து பட்லர் 21 ரன்களும் எடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுபுறம் ரியான் பராக் பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். ரியான் பராக் , துருவ் ஜுரேல் இருவரும் இணைந்து பந்துகளை , பவுண்டரி சிக்சருக்கு பறக்க விட்டனர். இதில் ரியான் பராக் 47 ரன்களும், துருவ் ஜுரேல் 28 ரன்களையும் சேர்க்க், ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட், துஷார் தேஸ்பண்டே 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 142 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 27 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த டேரில் மிட்செஇல் 22 ரன்களிலும், ஷிவம் தூபே 18 ரன்களிலும், மொயீன் அலி 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்ததுடன் 42 ரன்களைச் சேர்த்தூ அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.2ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு மிக்கிய காரமாக இருந்த சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இப்போட்டியின் போது சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதன் காரணமாக தனது விக்கெட்டை இழந்தார். அதன்படின் இன்னிங்ஸின் 16ஆவது ஓவரின் போது ரவீந்திர ஜடேஜா பந்தை அடித்தவிட்டு இரண்டு ரன்கள் எடுக்கும் முயற்சியில் ஓடினார். அப்போது அவர் இரண்டாவது ரன்னிற்காக ஓடிய போது பதி ஸ்கிரீஸிற்கு வந்ததுடன் மீண்டும் நான் ஸ்டிரைக்கர் திசையை நோக்கி ஓடினார்.
அப்போது ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் பந்தை ஸ்டம்புகளை நோக்கி த்ரோ அடிக்க, அதனை கணித்தவாரே ரவீந்திர ஜடேஜா அத்திசையை நோக்கி ஓடினார். இதனால் பந்து ரவீந்திர ஜடேஜாவின் மீது பட்டது. இதனை எதிர்த்து ராஜஸ்தான் அணி வீரர்கள் களநடுவர்களிடம் மேல்முறையீடு செய்தனர். இதனை ஆய்வு செய்த மூன்றாம் நடுவரும் ரவீந்திர ஜடேஜா ஃபில்டர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என்று கூறி அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார்.
இதனால் விரக்தியடைந்த ரவீந்திர ஜடேஜா காள நடுவர்களுடன் விவாதித்ததுடன், களத்தில் இருந்து வெளியேறிய போது கதியபடியே பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா அப்ஸ்ட்ரக்டிங் தி ஃபீல்ட் (Obstructing the Field) விதிப்படி விக்கெட்டை இழந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.