ஐபிஎல் 2024: சச்சின், கெய்வாட் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷான்!

Updated: Fri, May 10 2024 20:52 IST
Image Source: Google

குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல்  லீக் போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - சாய் சுதர்ஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் 30 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அவரைத்தொடர்ந்து கேப்டன் ஷுப்மன் கில்லும் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததன் மூலம் இருவரது பார்ட்னர்ஷிப்பும் 100 ரன்களைத் தாண்டியது. 

அதன்பின்னும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்ஷன் இப்போட்டியில் 62 ரன்களைக் கடந்த போது ஐபிஎல் தொடரில் தனது 1000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் எனும் சாதனையை சாய் சுதர்ஷன் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் 31 இன்னிங்ஸில் 1000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. 

அதனைத் தற்போது சாய் சுதர்ஷன் 25 இன்னிங்ஸில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் வரியிலும் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் 21 இன்னிங்ஸில் அடித்து முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸின் லிண்டல் சிம்மன்ஸ் 23 இன்னிங்ஸில் அடித்து இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த வீரர்கள்

  • 21 இன்னிங்ஸ் - ஷான் மார்ஷ்
  • 23 இன்னிங்ஸ் - லெண்டல் சிம்மன்ஸ்
  • 25 இன்னிங்ஸ் - மேத்யூ ஹைடன்
  • 25 இன்னிங்ஸ் - சாய் சுதர்சன்*
  • 26 இன்னிங்ஸ் - ஜானி பேர்ஸ்டோவ்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை