மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் - ரசிகர்கள் கண்டனம்!

Updated: Wed, May 08 2024 13:57 IST
மூன்றாம் நடுவரின் சர்ச்சை முடிவு; சஞ்சு சாம்சனுக்கு அபராதம் - ரசிகர்கள் கண்டனம்! (Image Source: Google)

டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் போரல் - ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் இணை களமிறங்கினர்.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஃபிரேசர் மெக்குர்க் 19 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால், 50 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அவர் விக்கெட்டையும் இழக்க, அடுத்து களமிறங்கிய ஷாய் ஹோப் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் போரல் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அதன்பின் அதிரடியாக விளையாடி அபிஷேக் போரல் 65 ரன்களிலும், ரிஷப் பந்த் 15 ரன்களில் பெவிலியன் திரும்ப அடுத்து களமிறங்கிய குல்பதீன் நைப் 19 ரன்களுக்கு விக்க்ர்ட்டை இழந்தார். ஆனாலும் இறுதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 ரன்களிலும், ரஷீக் சலாம் 9 ரன்களிலும் விக்கெட்டாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி 221 ரன்களை குவித்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அபாராமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்து அசத்தினர். அவருக்கு துணையாக ரியான் பராக் 27 ரன்களையும், ஷுபம் துபே 25 ரன்களைச் சேர்த்தனர். 

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் சதத்தை நோக்கி நர்ந்த நிலையில் 86 ரன்களை எடுத்த போது சர்ச்சையான முறையில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரரளாலும் இலக்கை எட்ட முடியாததால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. 

இந்நிலையில் இப்போட்டில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த விதம் சமூகம் வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியதுடன், மூன்றாம் நடுவரின் மீதான கேள்விகளையும் சர்ச்சைகளையும் அதிகரித்துள்ளது. ஏனெனில் நேற்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 86 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதன்படி இரண்டாவது இன்னிங்ஸின் 16ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தை சிக்ஸர் அடிக்க முயன்றார் சஞ்சு சாம்சன்.

அதை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ஷாய் ஹோப் கேட்ச் பிடித்தார். இருந்தும் அவரது கால் பவுண்டரி லைனில் உரசியது போல் இருந்தது. இதனால் முடிவு மூன்றாம் நடுவருக்கு சென்றனது. அதனை சோதித்த மூன்றாம் நடுவரும் காணொளியை சில நொடிகள் மட்டுமே பார்த்துடன், அதன் ஒரு கண்ணோட்டத்தை பார்த்து மட்டுமே சஞ்சு சாம்சன் அவுட் என தீர்பளித்தார். ஆனால் மூன்றாம் நடுவரின் பரிசோதனையின் போது மற்றொரு காட்சியில் ஷாய் ஹோப் கல் பவுண்டரி எல்லையை தொட்டது போல் தெரிந்தது.

இதனால் சஞ்சு சாம்சன் டிஆர்எஸ் போகுமாறு சொன்னார். ஆனால், அதற்கு வாய்ப்பு இல்லை என நடுவர்கள் தெரிவித்தவுடன் அவர் விரக்த்தியுடன் களத்திலிருந்து வெளியேறினார். அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வெற்றிக்கான ரன்களை கடக்க முடியவில்லை.இந்நிலையில், நடுவருடன் விவாதித்ததாக சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவரது போட்டிக்கான கட்டணத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் சஞ்சு சாம்சனுன் தன்மீதான தவறை ஒப்புக்கொண்டதாக பிசிசிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுஒருபக்கம் இருக்க, தான் அவுட் இல்லை என்பதை கேட்ட சஞ்சு சாம்சன் ஏன் அபராதம் விதிக்கப்பட்டது என்றும், தொடர்ந்து சர்ச்சையான முடிவுகளை வழங்கி வரும் நடுவர்கள் மீது ஏன் எந்த அபராதமோ அல்லது நடவடிக்கைகளோ எடுக்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை