ஐபிஎல் 2024: மோசமான சாதனை படைத்த ஷிகர் தவான்!

Updated: Sat, Mar 23 2024 18:37 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ர பஞ்சாப் கிங்ஸ் அணியானது முதலில்பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 33 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அபிஷேக் போரல் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 32 ரன்களையும் சேர்த்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் அதிரடியாக தொடங்கிய ஷிகர் தவான் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களைச் சேர்த்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியனுக்கு திரும்பினார். இப்போட்டியில் ஷிகர் தவான் போல்டானதன் மூலம் ஐபிஎல் தொடரில் மோசமான சாதனை ஒன்றையும் படைத்துள்ளார். அதன்படி ஐபிஎல் தொடர் வரலாற்றி அதிகமுறை க்ளீன் போல்டான வீரர் எனும் மோசமான சாதனையை தவான் படைத்துள்ளார். 

முன்னதாக நட்சத்திர வீரர் விராட் கோலி 38 முறை போல்டானதே சாதனையாக இருந்த நிலையில், அதனை தற்போது 39 முறை போல்டாகி ஷிகர் தவான் இப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை சேர்த்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி 7,284 ரன்களுடன் முதலிடத்திலும், ஷிகர் தவான் 6,639 ரன்களுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் தொடரில் அதிகமுறை போல்டான வீரர்கள்

  • 39 - ஷிகர் தவான்*
  • 38 - விராட் கோலி
  • 35 - ஷேன் வாட்சன்
  • 30 - மணீஷ் பாண்டே
  • 29 - அம்பதி ராயுடு
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை