ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து. இதையடுத்து முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Advertisement

இதில் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா 12, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 26 ரன்களுக்கும் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்கியா ரஹானே 35 ரன்களையும், ஷிவம் தூபே 45 ரன்களையும் சேர்க்க, இறுதியில் ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா 31 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களும் விளாசி 12 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிச்கர்கள் என 37 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.  பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச்சென்றனர். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்த, அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென், நிதீஷ் சர்மா இணை அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் சிஸ்கே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற பின் பேசிய அபிஷேக் சர்மா, “இப்போட்டியில் நாங்கள் முதலில் பந்துவீச வந்தபோது பிட்ச் மெதுவாக இருப்பதை உணர்ந்தோம். இதன் காரணமாக பவர்பிளே ஓவர்களில் நாங்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் எங்களால் எளிதாக வெற்றி பெற முடியும் என்று எண்ணினோம். அதனால் தான் நான் பவர்பிளேவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினேன்.

நடப்பாண்டு ஐபில் தொடருக்காக நாங்கள் சிறப்பாக தயாராவதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு போட்டியிலும் தனிப்பட்ட முறையில் அதிக ரன்களைச் சேர்க்கும் போது அது நிச்சயம் அணியின் வெற்றிக்கு மிகப்பெரும் பங்காக இருக்கும். அதற்கேற்றவாரே நானும் இன்றைய ஆட்டத்தில் அதிர்டையாக விளையாடி ரன்களைச் சேர்த்தேன். இப்போட்டி நான் சிறப்பாக செயல்பட்டதற்கு யுவராஜ் சிங், பிரையன் லாரா மற்றும் எனது அப்பாவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

முன்னதாக நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடிய போது சிஎஸ்கே தரப்பில் இரண்டாவது ஓவரை முகேஷ் சௌத்ரி வீச, அதனை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா, அந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 27 ரன்களை விளாசித் தள்ளினார். இதன் காரணமாக ஹைதராபாத் அணி முதல் 6 ஓவர்களிலேயே 78 ரன்களைச் சேர்த்து. மேலும் முகேஷ் சௌத்ரி ஓவரில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடிய காணொளி வைரலானது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News