இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் குயின்டன் டி காக் 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் 3 ரன்களிலும் என புவனேஷ்வர் குமாரின் அடுத்தடுத்து ஓவர்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர். இதனால் லக்னோ அணி 21 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் கேஎல் ராகுலுடன் இணைந்த குர்னால் பாண்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார்.

Advertisement

அதன்பின் நிதனமாக விளையாடி வந்த கேப்டன் கேஎல் ராகுல் 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 சிக்ஸர்களுடன் 24 ரன்களைச் சேர்த்திருந்த குர்னால் பாண்டியாவும் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதனைத்தொடர்ந்து நிக்கோலஸ் பூரன் - ஆயூஷ் பதோனி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசியதுடன், 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் கடந்தனர். இதில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய ஆயூஷ் பதோனி 28 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

அவருக்கு துணையாக நிக்கோலஸ் பூரனும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 9 பவுண்டரிகளுடன் 55 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 48 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களைச் சேர்த்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் ஓவரில் நிதானம் காட்டிய நிலையில், அதன்பின் எதிர்கொண்ட ஒவ்வொரு ஓவரிலும் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் விளாசித்தள்ளி அசத்தினார். இதனால் லக்னோ அணி பந்துவீச்சாளர்கள் எப்படி பந்துவீசுவது என்ற தெரியாமல் தடுமாறி நிற்க, தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதல் 6 ஓவர்களிலேயே 100 ரன்களைக் கடந்து அசத்தினர். அதன்பின் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த அபிஷேக் சர்மாவும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய ஹைதராபாத் அணியின் வெற்றியும் எளிதானது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள் என 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என 75 ரன்களையும் சேர்த்து மிரட்டினர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து மிரட்டியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News