ஐபிஎல் 2024: முழு உடற்தகுதியை எட்டிய சூர்யகுமார் யாதவ்; மும்பை ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றுவருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் நடைபெற்றுவரும் லீக் போட்டிகளிலேயே ஒவ்வொரு அணியும் வெற்றியை ஈட்டி குவாலிஃபையர் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்துடன் விளையாடி வருகிறது.
இதில் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியானது இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியதுடன், தொடரின் ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் அந்த அணி தங்களது முதல் வெற்றியைப் பெறும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் நடப்பு சீசன் மும்பை இந்தியன்ஸ் அணியின் இடம்பிடித்திருந்த நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், கடந்த தென் ஆப்பிரிக்க தொடரின் போது காயமடைந்தார். அதன்பின் அறுவைசிகிச்சை மேற்கொண்டிண்ட அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவந்தார். இதனால் ஐபிஎல் தொடரில் நிச்சயம் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
ஆனால் அவர் தனது உடற்தகுதி தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை பங்கேற்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், தற்போது சூர்யகுமார் யாதவ் முழு உடற்தகுதியை எட்டியுள்ளதாகவும், இதன்மூலம் டெல்லி கேப்பில்லஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதுள்ள சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் இணைவது அந்த அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் சர்வதேச டி20 கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் அணியில் இணையவுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பலத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா, டெவால்ட் ப்ரீவிஸ், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், திலக் வர்மா, டிம் டேவிட், விஷ்ணு வினோத், அர்ஜுன் டெண்டுல்கர், ஷம்ஸ் முலானி, நேஹால் வதேரா, ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ரொமாரியோ ஷெப்ஃபர்ட், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குவேனா மகபா, ஸ்ரேயாஸ் கோபால், நுவான் துஷாரா, நமன் திர், அன்ஷுல் கம்போஜ், முகமது நபி, ஷிவாலிக் சர்மா.