Advertisement

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 62ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ச் பெங்களூரு அணியை எதிர்த்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்ஸர் படேல் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர்.

Advertisement

இருவரும் முதல் ஓவரிலிருந்தே அதிரடி காட்ட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஃபாஃப் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 27 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து இணைந்த வில் ஜேக்ஸ் - ராஜத் பட்டிதார் இணை அதிரடியாக விளையாடியதுடன் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசித் தள்ளினர். இதன்மூலம் அணியின் ஸ்கோரும் 100 ரன்களைத் தாண்டியாது.

இப்போட்டியில் அபாரமாக விளையாடிய ராஜத் பட்டிதார் நடப்பு ஐபிஎல் தொடரில் தனது 5ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 52 ரன்கள் சேர்த்த நிலையில் ராஜத் பட்டிதாரும், 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 41 ரன்கள் எடுத்த நிலையில் வில் ஜேக்ஸும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த கேமரூன் க்ரீன் - மஹிபால் லாம்ரோர் இணையும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கியது. இதில் லாம்ரோர் 13 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்தி ரன்கள் ஏதுமின்றியும் என கலீல் அஹ்மத் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர்.

அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய ஸ்வப்னில் சிங் முதல் பந்திலேயே விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த கரண் சர்மாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை களத்தில் இருந்த கேமரூன் க்ரீன் 32 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களைச் சேர்த்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் கலீல் அஹ்மத், ரஷிக் தார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News