ஐபிஎல் 2025: கேகேஆர் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம்; வெங்கடேஷ் ஐயருக்கு துணைக்கேப்டன் பதவி!

Updated: Mon, Mar 03 2025 20:01 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான அதிகாரபூர்வ அட்டவணை நேற்று (பிப்ரவரி 16) வெளியிடப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. லீக் போட்டிகள் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதைத்தொடர்ந்து பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி  கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான தங்கள் அணியின் புதிய ஜெர்சியை நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ச் அணி இன்று அறிமுகப்படுத்தியது. அதன்படி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கேகேஆர் அணியின் ஜெர்சியில், அந்த அணி இதுவரை ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றதைக் குறிக்கும் வகையில் இலச்சினைக்கு மேல் மூன்று நட்சத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளது. 

மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அனுபவ வீரர் அஜிங்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு இந்த அணியின் துணைக்கேப்டனாக வெங்கடேஷ் ஐயரும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக நடந்து முடிந்த வீரர்கள் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அஜிங்கியா ரஹானேவை அடிப்படை விலையன ரூ.1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

மேற்கொண்டு சமீப காலங்களில் அவர் மும்பை அணியின் கேப்டனாக உள்ளூர் போட்டிகளில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் அவரது தலைமையிலான மும்பை அணி கடந்த சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. மேற்கொண்டு அத்தொடரில் அதிரடியாக விளையாடி ரஹானே 9 போட்டிகளில் 469 ரன்களைக் குவித்து அத்தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்றிருந்தார்.

இது தவிர்த்து அஜிங்கியா ரஹானே ஐபிஎல், உள்ளூர் தொடர்கள் மட்டுமின்றி சர்வதேச அளவில் இந்திய அணியை வழிநடத்திய அனுபவத்தையும் கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்தும் வாய்ப்பானது எனக்கு கிடைத்த மரியாதை என்று ரஹானே தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரஹானே, ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான கேகேஆரை வழிநடத்தும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது ஒரு மரியாதை. எங்களிடம் ஒரு சிறந்த மற்றும் சமநிலையான அணி இருப்பதாக நான் நினைக்கிறேன். அனைவருடனும் இணைந்து பணியாற்றவும், எங்கள் பட்டத்தை பாதுகாக்கும் சவாலை ஏற்கவும் நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர் (துணைக்கேப்டன்),ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, ரமன்தீப் சிங், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், அன்ரிச் நோர்ட்ஜே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி வைபவ் அரோரா, மயங்க் மார்கண்டே, ஸ்பிர்மன் பாண்டே பவல், ஸ்பிர்மன் பான்டே பவல் , அனுகுல் ராய், மொயின் அலி, உம்ரான் மாலிக்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை