எங்கள் வீரர்காள் எப்படி விளையாட வேண்டும் என்ற ப்ளூபிரிண்ட் வைத்துள்ளனர் - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து களமிறங்கியது.
அந்தவகையில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இஷான் கிஷனின் அபாரமான சதத்தின் மூலமாகவும், டிராவிஸ் ஹெட்டின் அரைசதத்தின் காரணமாகவும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இஷான் கிஷன் 106 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 67 ரன்களையும் எடுத்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சஞ்சு சாம்சன் 66 ரன்களையும், துருவ் ஜூரெல் 70 ரன்களையும், ஷிம்ரான் ஹெட்மையர் 42 ரன்களையும், ஷுபம் தூபே 34 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 242 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “எங்கள் அணி வீரர்களுக்கு பந்துவிச எனக்கு விருப்பமில்ல. அவர்கள் நம்பமுடியாத அளவிற்கு அதிரடியாக விளையாடினர். அதனை பார்க்கும் போது ஒரு பந்துவீச்சாளரா எனக்கு பயத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த மைதானம் பந்து வீச்சாளர்களுக்கு கடினம் என்பது தெரியும், ஆனால் இவ்வளவு பெரிய ஸ்கோரை நீங்கள் குவிக்கும் போது ஒரு ஓவர் கூட உங்கள் வெற்றியை தீர்மானித்துவிடும்.
Also Read: Funding To Save Test Cricket
இன்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் அற்புதமாக தெரிந்தார். அவர் சுதந்திரமா விளையாட முயற்சி செய்கிறார். அதற்கான எங்களின் தயாரிப்பும் அற்புதமா இருந்தது, பயிற்சியாளர்களின் ஆதரவும் எங்களுக்கு நம்ம பயிற்சியாளர்கள் அற்புதமா இருந்துச்சு. இந்த சீசன் முழுக்க எப்படி விளையாட வேண்டும் என்று அணியில் உள்ள அனைவரும் ஒரு ப்ளூபிரிண்ட் வைத்துள்ளனர்” என்றூ தெரிவித்துள்ளார்.