இங்கிலாந்து தொடருக்கான இந்திய யு19 அணி அறிவிப்பு; ஆயூஷ் மாத்ரே கேப்டனாக நியமனம்!
இந்திய அண்டர் 19 அணியானது எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 50 ஓவர் பயிற்சி ஆட்டம், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இரண்டு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இங்கிலாந்து யு19 மற்றும் இந்தியா யு19 அணிகளுக்கு இடையேயான பயிற்சி போட்டி ஜூன் 24ஆம் தேதியும், 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது ஜூன் 27ஆம் தேதி தொடங்கி ஜூலை 7ஆம் தேதி வரையிலும், இரண்டுநாள் போட்டிகள் ஜூலை 12ஆம் தேதி தொடங்கி ஜூலை 23ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. இதையடுத்து இத்தொடருக்கான இந்திய அண்டர்19 அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஆயூஷ் மாத்ரே தலைமையிலான இந்த இந்திய அணியில் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கலக்கி வரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு இடம் கிடைத்துள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 7 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் என 247 ரன்களைச் சேர்த்து சிறப்பான ஃபார்மில் உள்ளார். மேலும் அவர் 35 பந்துகளில் சதமடித்தும் அசத்தியுள்ளார்.
அதேசமயம் இந்த அண்டர்19 அணியில் அபிக்யான் குண்டு துணைக்கேப்டனாகவும், விக்கெட் கீப்பர் பெட்டர் ஹர்வன்ஷ் சிங் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு கூடுதல் வீரர்கள் பட்டியளில் நமன் புஷ்பக், டி தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விகல்ப் திவாரி, அலங்கிரித் ரபோல் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். அதேசமயம் இந்த அணியில் தமிழக வீரர் ஆண்ட்ரே சித்தார்த்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அண்டர் 19 அணி: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், ஆர் எஸ் அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது எனான், ஆதித்யா ராணா, அன்மோல்ஜீத் சிங்
Also Read: LIVE Cricket Score
கூடுதல் வீரர்கள்: நமன் புஷ்பக், டி தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விகல்ப் திவாரி, அலங்கிரித் ரபோல்