எங்கள் பேட்டிங் பவர்பிளே அவ்வளவு சிறப்பாக இல்லை - பாட் கம்மின்ஸ்!

Updated: Sat, May 03 2025 11:31 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் சாய் சுதர்ஷன் 48 ரன்களையும், கேப்டன் ஷுப்மன் கில் 76 ரன்களையும், அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லரும் 64 ரன்களையும் சேர்த்து அசத்தினர். இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழப்பிற்கு 224 ரன்களைச் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்தேவ் உனாத்கட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 74 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்ததால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. 

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்ததற்கு இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று எங்கள் பேட்டிங் பவர்பிளே அவ்வளவு சிறப்பாக இல்லை. மற்றொன்று நான் மற்றவர்களைப் போல சரியாக செயல்படவில்லை. ஏனெனில் நான் விட்ட கேட்சுகளின் காரணமாக அவர்கள் கூடுதலாக 20-30 கூடுதல் ரன்கள் எடுத்தனர். அதனால் என்னுடைய தவறின் காரணமாக அவர்களை அதிக ரன்களை அடிக்க விட்டுவிட்டோம்.

Also Read: LIVE Cricket Score

அதன்பின் இந்த மைதானத்தில் 200 ரன்களைத் துரத்துவது கொஞ்சம் யதார்த்தமாகத் தெரிந்தது. அவர்கள் தரமான பேட்டர்கள். அவர்கள் விசித்திரமாக எதுவும் செய்ய மாட்டார்கள். நாம் மோசமான பந்துகளை வீசும் போது அவர்கள் அதனை பவுண்டரிகளுக்கு அடிக்கின்றனர். இது உண்மையிலேயே இது ஒரு நல்ல விக்கெட். அபிஷேக் சர்மா நன்றாக பேட் செய்தார். இறுதியில் நிதிஷ். குமரும் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் நாங்கள் கொஞ்சம் தாமதமாக இருந்துவிட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை