ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய கிளென் பிலீப்ஸ்?

Updated: Sat, Apr 12 2025 13:42 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் அடுத்தடுத்து வெற்றிகளைப் பதிவுசெய்த கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதன் காரணமாக, இதில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி அந்த அணியின் நடத்திர வீரர் கிளென் பிலீப்ஸ் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங்  செய்து கொண்டிருந்த போது கிளென் பிலீப்ஸ் காயத்தை சந்தித்திருந்தார். இதனால் அவர் மைதானத்தில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினர். 

இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனையின் முடிவில் காயம் திவீரமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் கிளென் பிலீப்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதுடன், நியூசிலாந்து திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் கிளென் பிலீப்ஸ் விலகுவார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை. 

முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடாவும் தனிப்பட்ட காரணங்களுக்காக நாடு திரும்பிய நிலையில், தற்சமயம் கிளென் பிலீப்ஸும் நாடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ரஷீத் கான், ஜெரால்ட் கோட்ஸி மற்றும் கரீம் ஜனத் ஆகியோர் மட்டுமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கிளென் பிலிப்ஸைப் பற்றிப் பேசினால், நியூசிலாந்தைச் சேர்ந்த இவர் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் மூலம் தனது அணிக்கு பங்களிக்கும் திறனைக் கொண்டவர். மேற்கொண்டு அவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார் என்பதால் அவரை 4டி வீரர் என்றும் ரசிகர்கள் அழைக்கின்றனர். இதன் காரணமாக வீரர்கள் மெகா ஏலத்தில் அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இருப்பினும் அவருக்கு பிளேயிங் லெவனில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில் (கேப்ட்ன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாருக் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ராகுல் திவேத்தியா, ரஷித் கான், நிஷாந்த் சிந்து, மஹிபால் லோம்ரோர், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர், ஜெரால்ட் கோட்ஸி, முகமது அர்ஷத் கான், குர்னூர் சிங் ப்ரார், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், சாய் கிஷோர், இஷாந்த் சர்மா, ஜெயந்த் யாதவ், கிளென் பிலிப்ஸ், கரீம் ஜனத், குல்வந்த்யா கே.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை