ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் நிதீஷ் ரெட்டி 31 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 27 ரன்களையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற விரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. டைட்டன்ஸ் தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏற்றமளித்தனர். இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 49 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஷுப்மன் கில் 61 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடன் மூன்றாவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.

அதன்படி நேற்றைய ஆட்டத்தில் இஷாந்த் சர்மா உபகரணங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஐபிஎல் நடத்தை விதிகளின் படி இது தண்டனைக்குரிய குற்றமாகும். இதனையடுத்து இஷாந்த் சர்மாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமும், ஒரு கரும்புள்ளியையும் பிசிசிஐ அபராதமாக விதித்துள்ளாது. மேற்கொண்டு இஷாந்த் சர்மா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக மேற்கொண்டு விசாரனைக்கு ஆஜராக தேவையில்லை என்பதையும் பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News