இப்போது ஆட்டம் மாறிவிட்டது - சிஎஸ்கேவின் தோல்வி குறித்து எம் எஸ் தோனி!

Updated: Sat, Apr 26 2025 11:32 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அறிமுக வீரர் டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 42 ரன்களிலும், ஆயூஷ் மாத்ரே 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களையும், தீபக் ஹூடா 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இஷான் கிஷான் 44 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கமிந்து மெண்டிஸ் 32 ரன்களையும், நிதீஷ் ரெட்டி 19 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பிலும் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய எம் எஸ் தோனி, “இது போன்ற ஒரு தொடரில், நீங்கள் ஒன்று அல்லது இரண்டு பகுதிகளில் ஓட்டைகளை நிரப்ப முடிந்தால் அது நல்லதுதான், ஆனால் உங்கள் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால், அது மிகவும் கடினமாகிவிடும். அதனால் நீங்கள் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும், ஆனால் பெரும்பாலான வீரர்கள் சிறப்பாகச் செயல்படவில்லை எனில், கூடுதல் சில ஆட்டங்களில் விளையாடும் நபர்களை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

Also Read: LIVE Cricket Score

அது பலனளிக்கவில்லை என்றால், அடுத்த ஆட்டத்தில் நீங்கள் சில மாற்றங்களை சேய்ய வேண்டி இருக்கும். ஆனால் அவர்களில் 4 பேர் ஒரே நேரத்தில் சிறப்பாகச் செயல்படவில்லை என்றால், நீங்கள் மேலும் மாற்றத்தைச் செய்ய வேண்டியிருக்கும். நாங்கள் போதுமான ரன்களை சேர்க்காததால் எங்களால் தொடர்ந்து முன்னேற முடியவில்லை. நீங்கள் ரன்களைக் குவிப்பது அவசியம், ஏனெனில் ஆட்டம் மாறிவிட்டது. அது எப்போதும் 180-200 என்று நான் கூறவில்லை, ஆனால் நிலைமைகளை மதிப்பிட்டு, பின்னர் பலகையில் ரன்களை வைக்க முயற்சி செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை