எது சிறந்த சூழ்நிலை என்று நாங்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை - வெங்கடேஷ் ஐயர்!

Updated: Thu, Apr 10 2025 22:47 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து வருகிறது. இதில் நாளை நடைபெறும் 25ஆவது லீக் போட்டியில் எம் எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அஜிங்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவிய கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் இப்போட்டி முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கேகேஆர் அணியின் துணைக்கேப்டன் வெங்கடேஷ் ஐயர், “கடைசி ஆட்டத்தில் கூட நாங்கள் மிகச் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம். இறுதில் நாங்கள் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றோம், அது ஒரு சமமான ஆட்டமாக இருந்தது.  அதனால் எங்களுக்கு எது சிறந்த சூழ்நிலை என்று நாங்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை. கிரிக்கெட்டின் நல்ல சூழ்நிலைகளுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்கிறோம்.

அதுதான் தொழில்முறை விளையாட்டிற்கு சிறந்தது. ஒரு அணி சாம்பியனாக வேண்டும் என்றால், எல்லா சூழ்நிலைகளிலும் சிறப்பாகச் செயல்படக்கூடிய கூட்டணி உங்களிடம் இருக்க வேண்டும். நான் கொண்டுள்ள மனநிலையே எப்போதும் அளவுகோலாக இருந்து வருகிறது, மேலும் விளையாட்டைப் பற்றிய ஒரு நல்ல மனநிலையை நான் கொண்டு இருப்பதாக உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Chennai Super Kings vs Kolkata Knight Riders Probable Playing XI

Chennai Super Kings Probable Playing XI: ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ஷிவம் துபே, மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, விஜய் சங்கர், ரவிச்சந்திரன் அஷ்வின், நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, கலீல் அகமது.

இம்பாக்ட் பிளேயர் - மதீஷ பத்திரன.

Kolkata Knight Riders Probable Playing XI: குயின்டன் டி காக், சுனில் நரைன், அஜிங்கியா ரஹானே (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரமன்தீப் சிங், ஆண்ட்ரே ரஸல், ரிங்கு சிங், ஹர்ஷித் ராணா, ஸ்பென்சர் ஜான்சன், வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி.

Also Read: Funding To Save Test Cricket

இம்பாக்ட் பிளேயர் - ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை