ரிஷப் பந்த் நான்காம் இடத்தில் களமிறங்க வேண்டும் - சுரேஷ் ரெய்னா!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும், அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக நடைபெற்று முடிந்த இந்த வீரர்கள் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை ரிஷப் பந்த் படைத்துள்ளார். மேற்கொண்டு எதிவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகவும் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.'
அந்தவகையில் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது தங்களுடைய முதல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதற்காக அந்த அணி வீரர்களும் தீவிரமாக தாயாராகி வருகின்றனர். இந்நிலையில், எதிவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்த் 4ஆம் இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இந்த ஐபிஎல் சீசன் ரிஷப் பந்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவரது கேப்டன்சியைப் பார்த்தால், அவர் மிகவும் மகிழ்ச்சியானவர் மற்றும் மிகவும் புதுமையானவர் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு அந்த அமைதியும், சாதுர்யமான தலைமையும் இருக்கிறது. அவர் மூன்றாவது இடத்தில் விளையாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் அவர்களது அணியைப் பார்க்கும்போது, பூரன், டேவிட் மில்லர் மற்றும் ஐடன் மார்க்ராம் ஆகியோர் உள்ளனர்.
இதன் காரணமாக அவர் இத்தொடரில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அப்போது அவர்களின் பேட்டிங் வரிசையில் நிறைய ஆழம் இருக்கும். எனவே அவர் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்போது தான் அவரால் இறுதிவரை களத்தில் இருந்து இன்னிங்ஸை முடித்துக் கொடுக்க முயியும். ஆனால் இந்த ஐபிஎல் அவரது அதிர்ஷ்டத்தை மாற்றும் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: நிக்கோலஸ் பூரன், ரவி பிஷ்னோய், மயங்க் யாதவ், மொஹ்சின் கான், ஆயுஷ் பதோனி, ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் மில்லர், ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், அவேஷ் கான், அப்துல் சமத், ஆர்யன் ஜூயல், ஆகாஷ் தீப், ஹிம்மத் சிங், சித்தார்த், திக்வேஷ் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, மேத்யூ பிரீட்ஸ்கே