ஐபிஎல் 2025: பிளெசிங் முஸரபானியை ஒப்பந்தம் செய்தது ஆர்சிபி!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் கடந்த மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொட்ங்கியது. ஒருபக்கம் ஐபிஎல் தொடரானது மீண்டும் தொடங்கினாலும் இதில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது பெரும் சிக்கலாம மாறிவுள்ளது.
ஏனெனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தங்கள் வீரர்கள் மே 26 ஆம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது. அதன்படி தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11 முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுதவிர்த்து இங்கிலாந்து அணியும் இம்மாத இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடவுள்ளது. இதனால் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் இடம்பிடிப்பது கேள்விக்குறியாகிவுள்ளது. அந்தவகையில் தற்போது ஆர்சிபி அணியில் இடம்பிடித்துள்ள தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி பிளே ஆஃப் சுற்றிலிருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டது.
மே 26 ஆம் தேதிக்குள் ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்குத் தயாராவதற்காக இங்கிடி தென் ஆப்பிரிக்க திரும்பவுள்ளதன் காரணமாகா இந்த அறிவிப்பை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஜிம்பாப்வே அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பிளெசிங் முஸரபானியை ஆர்சிபி அணியானது ரூ.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆர்சிபி அணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிளெசிங் முசரபானி ஜிம்பாப்வே அணிக்காக 12 டெஸ்ட், 55 ஒருநாள் மற்றும் 70 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 198 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்காகவும், இன்டர்நேஷ்னல் லீக் டி20 தொடரில் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும், கரீபியன் பிரீமியர் லீக்கில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காகவும் விளையாடிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட்டும் தொடரிலிருந்து விலகிய நிலையில், தற்போது லுங்கி இங்கிடியும் தொடரிலிருந்து விலகியுள்ளது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மேலும் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும்ம் நிலையில் பிளெசிங் முஸரபானியை ஒப்பந்தம் செய்துள்ளது அந்த அணிக்கு உத்வேகமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.