குஜராஜ் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற இருக்கும் 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இரு அணிகளின் பலம், நேருக்கு நேர் மோதிய போட்டிகள், உத்தேச லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.
குஜராத் டைட்டன்ஸ்
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் சிறப்பாக செயல்பட்டு வலிமையான அணியை உருவாக்கியுள்ளது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஜோஸ் பட்லர், சாய் சுதர்ஷன், ஷாரூக் கான், ராகுல் திவேத்தியா, கிளென் பிலீப்ஸ், மஹிபால் லாம்ரோர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ரஷித் கான், காகிசோ ரபாடா, சாய் கிஷோர், கரீன் ஜானத், ஜெரால்ட் கோட்ஸி, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் உள்ளிட்டோர் இடம்பிடித்துள்ளனர். இதனால் அந்த அணி வேகப்பந்து வீச்சு மற்றும் சுழற்பந்து வீச்சு என இரு துறைகளிலும் வலிமையாக உள்ளது. இதனால் அந்த அணி நடப்பு ஐபிஎல் தொடரில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், கிளென் பிலிப்ஸ், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, வாஷிங்டன் சுந்தர், ரஷீத் கான், முகமது சிராஜ், காகிசோ ரபாடா, பிரசித் கிருஷ்ணா.
பஞ்சாப் கிங்ஸ்
வீரர்கள் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது ஸ்ரேயாஸ் ஐயரை அதிக தொகைக்கொடுத்து ஏலம் எடுத்ததுடன் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அந்த அணியில் பிரப்ஷிம்ரன் சிங், ஷஷாங்க் சிங், கிளென் மேக்ஸ்வெல், மார்கன்ஸ் ஸ்டொய்னிஸ், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, நேஹால் வதேரா, அஸ்மதுல்லா ஒமர்ஸாய் உள்ளிட்டோர் உள்ளனர்.
மேற்கொண்டு இந்த அணியில் அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், யுச்வேந்திர சஹால், லோக்கி ஃபெர்குசன், குல்தீப் சென், சேவியர் பார்ட்லெட் ஆகியோருடன் கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டொய்னிஸ், அஸ்மதுல்லா ஒமர்ஸ்யா, மார்கோ ஜான்சென் உள்ளிட்டோரும் பந்துவீச்சில் கைகொடுப்பார்கள் என்பதால் அந்த அணி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: ஜோஷ் இங்கிலிஸ், பிரப்சிம்ரன் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், லாக்கி ஃபெர்குசன், வைஷாக் விஜய்குமார்.
நேருக்கு நேர்
- மொத்தம் - 05
- குஜராத் டைட்டன்ஸ் - 03
- பஞ்சாப் கிங்ஸ் – 02
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ஜோஸ் பட்லர், பிரப்ஷிம்ரன் சிங்
- பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), ஷஷாங்க் சிங், ஷுப்மான் கில் (கேப்டன்), சாய் சுதர்ஷன்
- ஆல்-ரவுண்டர்கள் - கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ்
- பந்து வீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், ரஷீத் கான், அர்ஷ்தீப் சிங்.