லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்: அணிகள் ஓர் அலசல்!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இன்று நடைபெற இருக்கும் 13ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் வெற்றிகளுக்கு பிறகு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளில் பலம், அணிகளின் உத்தேச லெவன், நேருக்கு நேர் தரவுகள் மற்றும் ஃபேண்டஸி லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான போட்டியில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவினாலும், அடுத்த போட்டியில் வலிமையான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய உத்வேகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. அந்த அணியின் பேட்டிங்கில் மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், டேவிட் மில்லர், அப்துல் சமத் என அதிரடி வீரர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.
இருப்பினும் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் ரன்களைச் சேர்க்க தவறி வருவது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவரும் ஃபார்முக்கு திரும்பும் பட்சத்தில் அந்த அணியின் ஸ்கோரை தடுத்து நிறுத்துவது கடினமாகும். அதேசமயம் பந்துவீச்சில் ஷர்தூல் தாக்கூர், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் ஆகியோருடன் பிரின்ஸ் யாதவும், மணிமாறன் சித்தார்த் உள்ளிட்டோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணிக்கு உத்வேகமளிக்கிறது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் உத்தேச லெவன்: மிட்செல் மார்ஷ், ஐடன் மார்க்ராம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், பிரின்ஸ் யாதவ், ரவி பிஷ்னோய், அவேஷ் கான்.
பஞ்சாப் கிங்ஸ்
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அந்த அணியில் பேட்டிங்கில் பிரப்ஷிம்ரன் சிங், அறிமுக வீரர் பிரியன்ஷ் ஆர்யா, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஷஷாங்க் சிங் உள்ளிட்டோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். அவர்களுடன் அதிரடி வீரர்கள் மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோரும் பேட்டிங்கில் சோபிக்கும் பட்சத்தில் அது அணியின் பலத்தைக் கூட்டும்.
மேற்கொண்டு அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால், வைஷாக் விஜயகுமார் ஆகியோருடன் மார்கஸ் ஸ்டொய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோரும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் இன்றைய ஆட்டத்தைல் அஸ்மதுல்லா ஒமர்ஸாய்க்கு பதிலாக லோக்கி ஃபெர்குசன் லெவனில் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஷஷாங்க் சிங், சூர்யான்ஷ் ஷேட்ஜ், அஸ்மதுல்லா ஒமர்சாய்/ லோக்கி ஃபெர்குசன், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 04
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 03
- பஞ்சாப் கிங்ஸ் - 01
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்- நிக்கோலஸ் பூரன் (துணை கேப்டன்), ரிஷப் பந்த்
- பேட்ஸ்மேன்கள் - ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், பிரியான்ஷ் ஆர்யா, ஷஷாங்க் சிங்
- ஆல்-ரவுண்டர்கள் - மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், அஸ்மதுல்லா உமர்சாய்
- பந்து வீச்சாளர்கள் - அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாக்கூர்.