ஐபிஎல் 2024 மினி ஏலம்: நியூசிலாந்து ஆல் ரவுண்டர்களை தட்டித்தூக்கிய சிஎஸ்கே!

Updated: Tue, Dec 19 2023 15:13 IST
Image Source: Google

ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் இன்று துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து 10 அணிகளிலும் உள்ள வெறும் 77 இடங்களுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 33 வீரர்கள் போட்டி போட்டதால் அதிக தொகைக்கு விலை போகப் போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது.

அந்த சூழ்நிலையில் துவங்கிய ஏலத்தில் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை அடித்து நொறுக்கி வெற்றியை பறித்த ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை வாங்குவதற்கு சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே கடுமையான போட்டி நிலவியது. ஆனால் கடைசியில் ஹைதராபாத் நிர்வாகம் விட்டுக் கொடுக்காமல் 6.80 கோடிக்கு போட்டி போட்டு அவரை வாங்கியது.

அந்த நிலைமையில் 2ஆவது செட்டில் வந்த வீரர்களில் நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை வாங்குவதற்கு சில அணிகள் போட்டியிட்டது. ஆனால் இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை 1.80 என்ற குறைந்த விலையிலேயே வளைத்து போட்டது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனெனில் நடைபெற்று முடிந்த 2023 உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக விளையாடிய அவர் 8 இன்னிங்ஸில் 523 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடினார்.

அதுமட்டுமல்லாமல் உலகக் கோப்பை வரலாற்றில் அறிமுக தொடரிலேயே அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையும் அவர் படைத்தார். அதனால் இந்த உலகக் கோப்பையில் அவர் குறைந்தது 5 முதல் 10 கோடிகளுக்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை நிர்வாகம் மிகவும் குறைந்த விலைக்கு வாங்கியது உண்மையாகவே பாராட்டத்தக்க முடிவு என்று சொல்லலாம்.

அதேப்போல் அதன்பின் ஏலம்விடப்பட்ட மற்றொரு நியூசிலாந்து நட்சத்திர வீரர் டெரில் மிட்செலை கடும் போட்டிக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனெனில் 12 கோடி வரை ஏலத்தில் இல்லாத சென்னை அணி, அதுவரை போட்டியிலிருந்த பஞ்சாப் கிங்ஸிடமிருந்து தட்டிப்பறித்துள்ளது.

அதுதவிற இந்திய வீரர் ஷர்தூல் தாக்கூரை ரூ 4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அதேசமயம் பாட் கம்மின்ஸ், ஜெரால்ட் கோட்ஸி உள்ளிட்ட வீரர்களுக்கு ஆரம்பத்தில் ஏலம் கேட்ட சிஎஸ்கே அணி, பின்னர் ஏலத்திலிருந்து பின் வாங்கியது. அதன்படி பாட் கம்மின்ஸை ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஜெரால்ட் கோட்ஸியை ரூ.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏலத்தில் வாங்கியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை