இத்தொடரை ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் சிறப்பாகத் தொடங்குவது முக்கியம் - ஆடம் கில்கிறிஸ்ட்!

Updated: Thu, Mar 20 2025 14:27 IST
Image Source: Google

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனானது எதிர்வரும் மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேற்கொண்டு பிளே ஆஃப் போட்டிகள் மே 20 ஆம் தேதி முதல் தொடங்கும் நிலையில் தொடரின் இறுதிப்போட்டி மே 25 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் அதிரடி தொடக்க வீரர் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் விளையாடவுள்ளார். கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜேக் ஃபிரேசர் மெக்குர்கை விடுவித்தது. அதன் பின்னர் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தின் போது மீண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது ரூ.9 கோடிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்கை மீண்டும் ஒப்பந்தம் செய்தது. 

ஏனெனில் கடந்தாண்டு ஐபிஎல் தொடரின் மாற்று வீரராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிடில் விளையாடிய ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் 9 போட்டிகளில் விளையாடி 4 அரைசதங்களுடன் 330 ரன்களைக் குவித்து அசத்தினார். இதன் காரணமாகவே நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்தது. ஆனால் சமீப காலங்களில் அவர் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க முடியாமல் தடுமாறி வருகிறார். 

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் சிறப்பாக செயல்படவில்லை எனில் அவர் டெல்லி கேப்பிட்டல்ஸின் லெவனில் இருந்து வெளியேற்றப்படுவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் எச்சரித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ஜேக் ஃபிரேசர் மெக்குர்கை அணியில் தக்கவைத்துக்கொள்வதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதனால் அவர் இத்தொடரை அவர் சிறப்பாகத் தொடங்குவது முக்கியம்.

ஐபிஎல் பற்றி எனக்குத் தெரிந்த விஷயம் என்னவென்றால், அணி உரிமையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் நீண்ட காலத்திற்குப் பலன்கள் இல்லாததை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். ஒரு தொடரை நீங்கள் சிறப்பாகத் தொடங்கினால், அதில் ஆழமாகச் சென்று சௌகரியமாக உணர உங்களுக்கு நேரம் கிடைக்கும். அதனால் தனக்கும் தனது அணிக்கும் ஒரு வலுவான போட்டியை உருவாக்க ஆரம்பத்திலிருந்தே சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதை ஜேக் அறிவார் என்று நம்புகிறேன்.

அவர் பேட்டிங் செய்த விக்கெட் கடந்த ஆண்டு அசாதாரணமாக அதிக ஸ்கோரைப் பெற்றது. அனைத்து வாய்ப்புகளும் இருக்கும். அந்த வாய்ப்புகளில் சமநிலையை வைத்திருப்பது இப்போது அவரைப் பொறுத்தது. அவர் எல்லோரையும் போலவே சமநிலையானவர் என்று நான் நினைக்கிறேன்.எல்லோரையும் போலவே, அவர் விளையாடுவதைப் பார்ப்பதில் நான் எப்போதும் உற்சாகமாக இருக்கிறேன், அவரால் நீண்ட இன்னிங்ஸ்களை விளையாட முடியும் என்பது உறுதி” என்று தெரிவித்துள்ளார்.

Also Read: Funding To Save Test Cricket

டெல்லி கேப்பிட்டல்ஸ்: அக்ஸர் படேல் (கேப்டன்), ஃபஃப் டு பிளெஸ்சிஸ் (துணைக்கேப்டன்),கேஎல் ராகுல், ஜேக் ஃபிரேசர்-மெக்குர்க், கருண் நாயர், அபிஷேக் போரல், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், குல்தீப் யாதவ், நடராஜன், மிட்செல் ஸ்டார்க், சமீர் ரிஸ்வி, அஷுதோஷ் சர்மா, மோஹித் ஷர்மா, முகேஷ் குமார், தர்ஷன் நல்கண்டே, விப்ராஜ் நிகம், துஷ்மந்த சமீரா, டோனோவன் ஃபெரீரா, அஜய் மண்டல், மன்வந்த் குமார், திரிபுரானா விஜய், மாதவ் திவாரி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை