ஐபிஎல்: ‘தல’யின் மலைக்கவைக்கும் சில சாதனை குறிப்புகள்!

Updated: Fri, Apr 23 2021 13:41 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல மலைக்க வைக்கும் சாதனைகளை தன் வசம் வைத்துள்ள மகேந்திர சிங் தோனி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன், கேப்டன் என அவர் நிகழ்த்திய சாதனைகள் எண்ணிலடங்கா. இவை தவிர ஐபிஎல்லில் 4 தனித்துவமான சாதனைகளுக்குச் சொந்தக்காரராக தல தோனி தனியிடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பது அவர் இறுதி கட்ட ஓவர்களில் பறக்கவிடும் இமாலய சிக்சர்களை உள்ளடக்கியது. ஐபிஎல் வரலாற்றில் 20 ஆவது ஓவர்களில் அதிக ரன்கள் விளாசிய வீரராக தோனி உள்ளார்.. இதுவரை அவர் ஐபிஎல் தொடர்களில் அடித்த ரன்னில்  550 க்கும் அதிகமான ரன்கள் 20 ஆவது ஓவரில் விளாசியது தான் என்பது கூடுதல் தகவல்.
.
இப்பட்டியலில் 3 ஆம் இடத்தை பிடித்திருப்பது ஐபிஎல் தொடரில் அதிக முறை இறுதிப் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனை. 8 முறை சென்னை அணிக்கு கேப்டனாக இறுதிப் போட்டிகளில் விளையாடிய தோனி, 2017 ஆம் ஆண்டு புனே அணியில் சக வீரராக இறுதிப் போட்டியில் விளையாடி, ஐபிஎல் தொடரில் அதிக முறை (9 முறை) இறுதி போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற சாதனையை தல தோனி படைத்துள்ளார்.


பேட்டிங் வரிசையில் வித்தியாசமான இடங்களில் களமிறங்கி தோனி அரை சதங்கள் விளாசியதே இந்த சாதனைப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பேட்டிங் வரிசையில் 3,4,5,6,7 ஆகிய ஐந்து வித்தியாசமான இடங்களிலும் களமிறங்கி அரை சதம் விளாசிய ஒரே வீரர் என்பது தான் இச்சாதனைஇ.

இப்பட்டியிலில் முதலிடத்தில் இருக்கும் சாதனையானது தோனியின் வாழ்நாள் சாதனை என்றும் கூறலாம். சச்சின், டிராவிட் காலகட்டங்களில் தொடங்கி, கோலி, ரோகித் காலகட்டங்களிலும், தற்போதைய இளம் தலைமுறை வீரர்களான பந்த்,, சஞ்சு சாம்சன் கால கட்டத்திலும் கேப்டனாக வலம் வருகிறார் தோனி. ஜாம்பவான்கள் காலம் தொடங்கி இளசுகளின் அத்தியாயத்திலும் கேப்டானாக  தோனியின் கால்தடம் பதிக்கப்பட்டுள்ளது பெருமைக்குறிய விசயமே.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை