ஐபிஎல் 2025: சிஎஸ்கே அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்ரீதரன் ஸ்ரீராம் நியமனம்!

Updated: Mon, Feb 24 2025 16:37 IST
Image Source: Google

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனுக்கான போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாக குழு சமீபத்தில் அறிவித்தது.அ அதன்படி 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது எதிவரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. 

இத்தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் மே 20ஆம் தேதி முதலும், இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 25ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.  இதுதவிர்த்து மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. அதன்பின் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியானது மார்ச் 23ஆம் தேதியானது சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெறுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதால், இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் ஒருபகுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் பயிற்சியாளர் குழுவில் வழு சேர்க்கும் விதமாக, முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீதரன் ஸ்ரீராமை அணியின் உதவி பந்துவீச்சு பயிற்சியாளராக நியமித்துள்ளது. 

இதன் மூலம் ஸ்டீபன் ஃப்ளெமிங் (தலைமை பயிற்சியாளர்), மைக்கேல் ஹஸ்ஸி (பேட்டிங் பயிற்சியாளர்) மற்றும் எரிக் சிம்மன்ஸ் (பந்துவீச்சு ஆலோசகர்) ஆகியோரை உள்ளடக்கிய அனுபவமிக்க பயிற்சியாளர்களுடன் ஸ்ரீராம் இணையவுள்ளார். இதற்கான அறிவிப்பை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய தினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணிக்காக கடந்த 2000ஆம் ஆண்டு சர்வ்தேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்ரீதரன் ஸ்ரீராம் 8 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அதில் ஒரு அரைசதம் மற்றும் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். 

Also Read: Funding To Save Test Cricket

அதன்பின் ஸ்ரீராமுக்கு பல்வேறு அணிகளுக்கு பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவத்தையும் கொண்டுள்ளார். அந்தவகையில் ஸ்ரீராம் சர்வதேச கிரிக்கெட்டில் 2016 முதல் 2022 வரை ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராகவும், கடந்த 2022-23ஆம் ஆண்டுகளில் வங்கதேச அணியின் ஆலோசகராகவும் செயல்பட்ட அனுபவத்தைக் கொண்டுல்ளார். இதுதவிர்த்து ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளிலும் பயிற்சியாளர் பொறுப்பில் ஸ்ரீராம் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை