ஐபிஎல் 2022: அகமதாபாத், லக்னோவை மையமாக கோண்டு ஐபிஎல் அணிகள் உருவாக்கம்!

Updated: Mon, Oct 25 2021 19:59 IST
Image Source: Google

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்று உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகபெரும் தொடராக பார்க்கப்பட்டு வருகிறது. பல்வேறு நாட்டு வீரர்கள் ஒரு அணியில் விளையாடியதால் ரசிகர்கள் மத்தியில் இந்த போட்டிக்கு பெரும் வரவேற்பு இருந்தது.வர்த்தக ரீதியிலும் இந்த போட்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஐபிஎல் தொடரில் தற்போது 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் 15ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் கூடுதலாக 2 அணிகள் இடம் பெறுகின்றன. மொத்தம் 10 அணிகள் அடுத்த சீசனில் விளையாடும்.

ஐபிஎல் புதிய அணிகளுக்கான ஏலம் டெண்டர் நடைமுறையை பிசிசிஐ கடந்த ஆகஸ்டு மாதம் இறுதியில் வெளியிட்டது. டெண்டருக்கான விண்ணப்பம் ரூ.10 லட்சம் ஆகும். இந்த தொகை திரும்ப வழங்கப்பட மாட்டாது.

அதன்படி ஐபிஎல் தொடரின் 2 புதிய அணிகளுக்கான ஏலம் இன்று நடைபெற்றது. ஒவ்வொரு அணியின் அடிப்படை விலை ரூ.2 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் அதானி குழுமம், அகமதாபாத்தை சேர்ந்த ஒரு கட்டுமான நிறுவனம், சஞ்சீவ் கோயங்காவின் ஆர்.பி.எஸ்.ஜி. குழுமம், நவீன் ஜிண்டாலின் ஜிண்டால் ஸ்டீல், அரபிந்தோ மருந்து நிறுவனம், இங்கிலாந்தின் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட், பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, நடிகர் ரன்வீர் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் என 22 நிறுவனங்கள் ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அகமதாபாத், கட்டாக், தர்மசாலா, கவுகாத்தி, இந்தூர், லக்னோ ஆகிய நகரங்களை மையமாக வைத்தே அணிகளின் ஏலம் தொடங்கியது.

இந்நிலையில் அகமதாபாத், லக்னோ ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய ஐபிஎல் அணிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இதில் லக்னோ அணியை சஞ்சீவ் கோயன்ங்காவின் ஆர்பிஎஸ்ஜி குழுமம் ரூ.7 ஆயிரம் கோடிக்கும், அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிட்டல்ஸ் நிறுவரும் ரூ. 5,200 கோடிக்கும் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை