ஐபிஎல் 2024: கேகேஆர் பயிற்சி முகாமில் இணைந்த மிட்செல் ஸ்டார்க்!

Updated: Mon, Mar 18 2024 13:33 IST
Image Source: Google

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐபிஎல் டி20 தொடரின் 17ஆவது சீசன் இன்னும் ஒருசில தினங்களில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. அதன்படி தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து, ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

அதேசமயம் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அந்த வகையில், இந்த தொடரில் சிறப்பாக செயல்பட அனைத்து அணிகளும் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஒவ்வொரு அணியில் உள்ள வீரர்களும் தங்களது பயிற்சி முகாமில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு (ரூ.24.75 கோடி) ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரான மிட்செல் ஸ்டார்க் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சி முகாமில் இணைந்துள்ளார். நடந்து முடிந்த வீரர்கள் மினி ஏலத்தில் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.27.75 கோடிக்க் ஏலத்தில் எடுத்து கொல்கத்தா அணி நிர்வாகம் ரசிகர்களை பிரமிக்க வைத்தனர். இதனால் இத்தொடரில் மிட்செல் ஸ்டார்கின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

இந்நிலையில் ஸ்டார்க் கேகேஆர் பயிற்சி முகாமில் இணைந்துள்ளது அந்த அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அணியின் பயிற்சி முகாமில் ஸ்டார்க் இணைந்ததை அந்த அணி நிர்வாகம் தங்களது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனையடுத்து ஸ்டார்க் இன்று முதல் பயிற்சியில் ஈடுபடுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

கொல்கத்தா ரைட் ரைடர்ஸ் அணி: நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), பில் சால்ட், சுனில் நரைன், சுயாஷ் சர்மா, அனுகுல் ராய், ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்ரவர்த்தி, கேஎஸ் பாரத், சேத்தன் சகாரியா, மிட்செல் ஸ்டார்க், அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட், மணீஷ் பாண்டே, முஜீப் உர் ரஹ்மான், துஷ்மந்த சமீரா, சாகிப் ஹுசைன்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை