IRE vs SA : மார்க் அதிர் பந்துவீச்சில் 165 ரன்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா!
அயர்லாந்து - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்லினில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் பவுமா 13 ரன்களில் ஆட்டமிழக்க, டி காக் 20 ரன்கலில் விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த ஜேன்மேன் மாலனும் 4 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மார்க்ரம் - வென்டெர் டூசென் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்த முயர்சித்தது. பின் 25 ரன்களில் வென்டெர் டூசன் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து 39 ரன்களில் மார்க்ரமும் விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த டேவிட் மில்லர் தனது பங்கிற்கு 28 ரன்களையும், காகிசோ ரபாடா 19 ரன்களையும் சேர்த்தானர். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. அயர்லாந்து அணி தரப்பில் மார்க் அதிர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.